(நியூயார்க்/கரகஸ்/மெக்சிகோ சிட்டி, ஜனவரி 05, 2026) – உலகமே உற்று நோக்கிக்கொண்டிருந்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் வழக்கு விசாரணை இன்று காலை நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் (SDNY) பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. அதேவேளை, வெனிசுலா விவகாரத்தோடு கிரீன்லாந்தையும் இணைத்து ட்ரம்ப் பேசியிருப்பது பூகோள அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
இன்று காலை கைவிலங்கிடப்படாமல், ஆனால் பலத்த அமெரிக்க மார்ஷல்களின் (US Marshals) பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட மதுரோ, நீதிபதி முன்னிலையில் மிக ஆக்ரோஷமாகத் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்த மதுரோ, “நான் குற்றவாளி அல்ல, நான் வெனிசுலாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி,” என ஆங்கிலத்தில் முழங்கினார்.
மதுரோவின் வழக்கறிஞர்கள், “ஒரு நாட்டின் தலைவரை கைது செய்து விசாரிக்கும் அதிகாரம் அமெரிக்க நீதிமன்றத்திற்கு இல்லை. இது சர்வதேச சட்டத்திற்கு எதிரான கடத்தல் நடவடிக்கை,” என வாதிட்டனர். இருப்பினும், அமெரிக்க அரசுத் தரப்பு, “மதுரோ ஒரு ஜனாதிபதி அல்ல, அவர் ஒரு போதைப்பொருள் மாஃபியா தலைவன்,” எனத் தங்களது வாதத்தை முன்வைத்தது. மதுரோ தப்பிச் செல்லும் அபாயம் உள்ளதாகக் கூறி, அவருக்குப் பிணை வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். வழக்கு விசாரணை முடியும் வரை அவர் நியூயார்க் சிறையிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மீண்டும் சூடுபிடிக்கும் கிரீன்லாந்து விவகாரம்!
கிரீன்லாந்து & டென்மார்க்: வெனிசுலாவைத் தொடர்ந்து, “அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக கிரீன்லாந்தை வாங்க வேண்டும்” என்ற ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசுகள் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளன. “கிரீன்லாந்து ஒரு சுதந்திர பூமி. நாங்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யத் தயார், ஆனால் எங்களை விற்க முடியாது. ட்ரம்ப்பின் இந்த பேச்சு எங்களை அவமதிப்பதாக உள்ளது,” எனக் கொதித்தெழுந்துள்ளார்.
“எங்கள் நேட்டோ (NATO) கூட்டாளி ஒருவரே எங்கள் நிலத்தை அபகரிக்க நினைப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது ஐரோப்பாவின் ஒற்றுமைக்கே விடப்பட்ட சவால்,” என டென்மார்க் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
அண்டை நாடுகளின் அச்சம் (கொலம்பியா & மெக்சிகோ):
வெனிசுலாவின் அண்டை நாடுகள் இந்த இராணுவ நடவடிக்கையால் நேரடிப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. வெனிசுலாவுடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கொலம்பியா, தனது எல்லையை முழுமையாக மூடியுள்ளது (Border Lockdown). “வெனிசுலாவில் தலைமை இல்லாததால் உள்நாட்டுப் போர் வெடித்தால், இலட்சக்கணக்கான அகதிகள் கொலம்பியாவிற்குள் ஊடுருவுவார்கள். இது எமது பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும்,” என கொலம்பிய ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். எல்லையில் இராணுவப் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்காவின் முக்கிய சக்தியான மெக்சிகோ, அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டித்துள்ளது. “ஒரு நாட்டின் பிரச்சினையைத் தீர்க்கப் படையெடுப்பு தீர்வாகாது. இது லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மை மீதான தாக்குதல்,” என மெக்சிகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான உறவில் இது விரிசலை ஏற்படுத்தலாம்.
வெனிசுலாவின் நட்பு நாடுகளின் நகர்வு (ரஷ்யா, கியூபா):
மதுரோவின் கைதைக் கண்டிக்கும் வகையில், ரஷ்யா தனது அணுசக்தி ஏவுகணை தாங்கும் கப்பல்களை (Nuclear-capable ships) கரீபியன் கடற்பகுதிக்கு நகர்த்தி வருவதாகச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இது அமெரிக்காவிற்கு விடுக்கப்படும் நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
நிகராகுவா & கியூபா ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதோடு, ஐக்கிய நாடுகள் சபையில் அவசரத் தீர்மானம் கொண்டு வர முயன்று வருகின்றன.









