Author: செய்திப் பிரிவு

  • அமெரிக்கா கனடா மீது தொடுத்த பொருளாதார யுத்தம்

    அமெரிக்கா கனடா மீது தொடுத்த பொருளாதார யுத்தம்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகள் விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் படி, கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25% வரி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும். கனடிய எரிசக்தி வளங்களுக்கு (மின்சாரம், இயற்கை எரிவாயு, எண்ணெய்) குறைவான 10% வரி விதிக்கப்படும். இந்த வரிகள் பிப்ரவரி 4, 2025 முதல் அமலுக்கு வரும்.

    இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்க, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் $107 பில்லியன் மதிப்புள்ள பொருட்களுக்கு 25% பதிலடி வரிகள் விதிக்க இருப்பதாக அறிவித்தார். இந்த பதிலடி வரிகள், அமெரிக்காவின் முக்கிய தொழில்நிறுவனங்கள் மற்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களை குறிவைத்து அமல்படுத்தப்படுகின்றன.

    இந்த வரி போர் இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தும். அமெரிக்காவில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார், எரிபொருள், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் உயரக்கூடும், இதனால் நுகர்வோர் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    மறுபுறம், கனடாவில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், மது, மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம். இது கனடிய நுகர்வோரின் செலவுகளை உயர்த்தும்.

    மேலும், இந்த வரிகள் இரு நாடுகளின் தொழில்நிறுவனங்களின் சப்ளைச் சங்கிலிகளை பாதிக்கக்கூடும், இதனால் வேலைவாய்ப்புகள் குறையலாம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தமாகலாம்.

    இரு நாடுகளும் இந்த வரி போரின் விளைவுகளை குறைக்க மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் $107 பில்லியன் மதிப்புள்ள பொருட்களுக்கு பதிலடி வரிகள் விதிக்க இருப்பதாக அறிவித்தார். 

    இந்த பதிலடி வரிகள் அமெரிக்காவின் முக்கிய பொருட்களை குறிவைக்கின்றன, அவற்றில்:

    • பீர், வைன், மற்றும் பூர்பன் போன்ற மது வகைகள்
    • பழங்கள்
    • வீட்டு உபயோக சாதனங்கள்

    இந்த வரிகள் பிப்ரவரி 4, 2025 முதல் அமலுக்கு வரும், மேலும் 21 நாட்களில் முழுமையாக செயல்படுத்தப்படும். 

    ட்ரூடோ, அமெரிக்கர்களுக்கு இந்த வரிகள் அவர்களின் வேலைவாய்ப்புகளை பாதிக்கக்கூடும் மற்றும் வாழ்க்கைச் செலவுகளை உயர்த்தக்கூடும் என்று எச்சரித்தார். மேலும், கனடா முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தி கொள்முதல் போன்ற துறைகளில் வரி அல்லாத நடவடிக்கைகளையும் பரிசீலிக்கலாம் என்று குறிப்பிட்டார். 

    கனடாவின் இந்த பதிலடி நடவடிக்கைகள், அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களை குறிப்பாக பாதிக்கும் வகையில் அமல்படுத்தப்படுகின்றன. 

    மேலும், கனடா மற்றும் மெக்சிகோ, அமெரிக்காவின் முக்கிய தொழில்நிறுவனங்கள் மற்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களை குறிவைத்து அமல்படுத்தப்படுகின்றன. 

    இந்த வரி போர் இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தும். அமெரிக்காவில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார், எரிபொருள், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் உயரக்கூடும், இதனால் நுகர்வோர் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 

    மறுபுறம், கனடாவில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், மது, மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம். இது கனடிய நுகர்வோரின் செலவுகளை உயர்த்தும். 

    மேலும், இந்த வரிகள் இரு நாடுகளின் தொழில்நிறுவனங்களின் சப்ளைச் சங்கிலிகளை பாதிக்கக்கூடும், இதனால் வேலைவாய்ப்புகள் குறையலாம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தமாகலாம். 

    இரு நாடுகளும் இந்த வரி போரின் விளைவுகளை குறைக்க மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அமரன் திரைப்படம் – ஊடக விமர்சனங்கள்

    அமரன் திரைப்படம் – ஊடக விமர்சனங்கள்

    தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் இன்று (அக்டோபர் 31) தீபாவளிக்காகத் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேஜர் முகுந்தின் மனைவி, இந்து ரெபக்கா வர்கீஸின் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இது இரண்டாவது தீபாவளி ரிலீஸ். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இந்த வருட தீபாவளிக்கு ‘அமரனாக’ துப்பாக்கியைப் பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா?

    ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் கூறுவது என்ன?

    ‘அமரன்’ திரைப்படத்தின் கதை என்ன?

    சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த ஒரு மோதலில் கொல்லப்பட்டார். இந்த மோதலில் அவருடன் மேலும் ஒரு ராணுவ வீரரும் மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

    அவரது ‘பயோபிக்’ (வாழ்க்கை வரலாற்றுப் படம்) தான் அமரன் என்பது அனைவரும் அறிந்ததே.

    “முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) என்ற இளைஞர், ராணுவத்தில் சேர்ந்து கேப்டன், பின்னர் மேஜர் என படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து, காஷ்மீரில் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார்,” என ‘தி இந்து தமிழ் திசை’யின் விமர்சனம் கூறுகிறது.

    “முன்னதாக தனது நீண்டநாள் காதலியான இந்துவை (சாய் பல்லவி) திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்கும் இடையேயான காதல் வாழ்க்கை, இன்னொரு பக்கம் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான முகுந்தின் அதிரடிகள், இறுதியில் நாட்டைக் காக்க வீரமரணம். இதுதான் ‘அமரன்’ படத்தின் கதை,” என்கிறது இந்த விமர்சனம்.

    ‘அமரன்’ திரைப்படம் ஷிவ் ஆரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய ‘India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’ என்ற புத்தகத் தொடரின் தழுவல் என ‘இந்தியா டுடே’ விமர்சனம் கூறுகிறது.

    அமரன் திரைப்படத்தின் கதை நமது ராணுவ வீரர்களின் குடும்பங்கள் சந்திக்கும் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும், மோசமான செய்தி எப்போது வேண்டுமானாலும் வரலாம் என பயம் மனதில் இருந்தாலும், முகத்தில் புன்னகையுடன் தங்கள் வாழ்க்கையை அக்குடும்பத்தினர் நடத்துகிறார்கள் என்பதை உணர்த்துகிறது என்றும் ‘இந்தியா டுடே’ விமர்சனம் கூறுகிறது.

    ‘வழக்கமான போர் திரைப்படங்கள் போல அல்லாமல்…’

    “வழக்கமான போர் சார்ந்த திரைப்படங்கள் போலல்லாமல், ‘அமரன்’ மிகைப்படுத்தப்பட்ட ஹீரோயிசத்தைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் உண்மையான, கடுமையான அனுபவங்களை சித்தரிக்கிறது,” என ‘டைம்ஸ் நவ் நியூஸ்’ விமர்சனம் கூறுகிறது.

    மேஜர் முகுந்தின் ராணுவ வாழ்க்கையின் பரபரப்பைக் காட்டிய அதே வேளையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் அம்சங்களையும் இக்கதை ஆராய்கிறது, நாட்டிற்கான கடமையையும் தனது குடும்ப வாழ்க்கையையும் சமமாகக் கொண்டு செல்ல அவர் முயற்சி செய்ததையும் இப்படம் பேசுகிறது, என ‘டைம்ஸ் நவ் நியூஸ்’ விமர்சனம் கூறுகிறது.

    “முகுந்தின் வாழ்க்கையின் பல கட்டங்களை இப்படம் விவரிக்கிறது. அவர் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவராக இருந்ததிலிருந்து தொடங்கி, இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற அவரது லட்சியம், அவரது காதல், சென்னை ‘அதிகாரிகள் பயிற்சி அகாடமியில்’ பயிற்சி பெற்றது முதல் இந்திய ராணுவத்தில் உயர் பதவிகளுக்கு சென்றது வரை,” என ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சனம் கூறுகிறது.

    படம் விறுவிறுப்பாக நகர்கிறதா?

    ‘அமரன்’ படத்தின் முடிவு பலருக்கும் தெரிந்திருந்தாலும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் விறுவிறுப்பான திரைக்கதை அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது என ‘இந்தியா டுடே’ விமர்சனம் கூறுகிறது.

    “படத்தின் முதல் பாதி முழுவதுமே முகுந்த்-இந்து இடையேயான காதல் காட்சிகளைக் கொண்டே நகர்கிறது. அவை எந்த இடத்திலும் ‘ஓவர் டோஸ்’ ஆகிவிடாதபடி சிறப்பாகவே எழுதப்பட்டிருக்கின்றன.” என ‘தி இந்து தமிழ் திசை’யின் விமர்சனம் கூறுகிறது.

    ஆனால் அதே சமயம், “படத்தின் பிரச்னையே ராணுவம் தொடர்பான காட்சிகளில் தான் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம் அவற்றில் எந்தவித டீட்டெய்லிங்-கும், நுணுக்கமும் இல்லை. காதல் காட்சிகளுக்காக மெனக்கெட்ட படக்குழு படத்தின் மையக்கருவான ராணுவம் தொடர்பான காட்சிகளில் கோட்டை விட்டு விட்டதோ என்று தோன்றுகிறது,” என்கிறது இந்த விமர்சனம்.

    “தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளில் அவசியமே இல்லாமல் இருந்த விரிவான விளக்கங்கள், ராணுவம் தொடர்பான காட்சிகளில் இல்லாமல் போனது பெரும் குறை,” என திரைப்படத்தின் குறைகளைப் பட்டியலிடுகிறது ‘தி இந்து தமிழ் திசை’யின் விமர்சனம்.

    படத்தின் ஒவ்வொரு அதிரடி சண்டைக் காட்சியும் விறுவிறுப்பாக உள்ளது, மற்றும் பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பில் வைத்திருக்கின்றன என ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சனம் கூறுகிறது.

    அதேபோல், ராணுவ அதிகாரிகளுக்கிடையேயான உரையாடல் காட்சிகள் முகுந்தை (சிவகார்த்திகேயன்) மட்டுமல்ல, அவரது சகாக்களையும் கவனிக்க வைக்கின்றன என்றும், புவன் அரோரா, ராகுல் போஸ் உட்பட ராணுவ அதிகாரிகளாக வரும் அனைத்து நடிகர்களும் கதையை நகர்த்துவதில் தங்கள் பங்கை அற்புதமாக செய்துள்ளார்கள் என்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சனம் கூறுகிறது.

    மேஜர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் பொருந்தினாரா?

    அமரனில், மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் இதுவரை பார்த்திராத ஒரு பக்கத்தைக் காட்டுகிறார் என்றும், அவரது நடிப்பு மற்றும் உடல் மொழி அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது என்றும் ‘இந்தியா டுடே’ விமர்சனம் கூறுகிறது.

    இந்து ரெபக்கா வர்கீஸின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பல்லவி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கூட, படத்திலும் அவர் பேசும் மலையாள மொழியும், அவரது உச்சரிப்பும் நெருடலாக உள்ளதாகவும், முக்கியமான காட்சிகளில் உணர்ச்சிகரமாக அவர் நடிக்கும்போது, அவரது வசன உச்சரிப்புகள் தடையாக உள்ளதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சனம் கூறுகிறது.

    திரையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இடையேயான கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக உள்ளதாகவும், அது ரசிகர்கள் இக்கதையுடன் ஒன்றுவதற்கு உதவுகிறது என்றும் ‘டைம்ஸ் நவ் நியூஸ்’ விமர்சனம் கூறுகிறது.

    “ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது. சி.எச்.சாயின் ஒளிப்பதிவு காஷ்மீரின் ரம்மியத்தையும், ஆக்‌ஷன் காட்சிகளின் தீவிரத்தையும் சிறப்பாக படம்பிடித்துள்ளது,” என ‘இந்தியா டுடே’ விமர்சனம் கூறுகிறது.

    “சொல்லப்படவேண்டிய ஒரு கதையை கையில் எடுத்துக் கொண்டு அதை முடிந்தளவு சமரசங்கள் செய்யாமல் திரையில் கொண்டு வந்த விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர். எனினும், முதல் பாதி காதல் காட்சிகளில் இருந்த நேர்த்தியும் மெனக்கெடலும் இரண்டாம் பாதி ராணுவம் தொடர்பான காட்சிகளிலும் இருந்திருந்தால் இந்த ‘அமரன்’ இன்னும் கொண்டாடப்பட்டிருப்பார்,” என்றும் ‘தி இந்து தமிழ் திசை’யின் விமர்சனம் கூறுகிறது.

    ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கம், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறந்த நடிப்பு, அமரன் திரைப்படத்தை ‘தேசப்பற்று, காதல் மற்றும் தியாகம் பற்றிய கதைகளில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக ஆக்குகிறது’ என ‘டைம்ஸ் நவ் நியூஸ்’ விமர்சனம் கூறுகிறது.

    ரசிகர்கள் சொல்வது என்ன?

    திரையரங்குகளில் அமரன் படம் பார்த்த ரசிகர்கள், அது குறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

    “படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் அருமையாக நடித்துள்ளனர். சண்டைக் காட்சிகள், வசனங்கள் என அனைத்தும் எதார்த்தமாக இருந்தன. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அமரன் படம் தான் சிறந்த படம்,” என சென்னையில் அமரன் திரைப்படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் கூறினார்.

    மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ரசிகை ஒருவர், “படம் விறுவிறுப்பாக இருந்தது, மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா இதுமாதிரியான சூழலை எப்படிச் சமாளித்தார் என்று யோசிக்க வைத்தது. திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது,” என்று தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    கிளைமாக்ஸ் காட்சி தரமாக இருக்கிறது என்ற கூறிய மற்றொரு ரசிகை, “அமரனுக்கு முன்பு வரை காமெடியாக நடித்த சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். துப்பாக்கி தூக்கிய காட்சிகள் எல்லாம் வேற லெவல்,” என்றார்.

    மேஜர் முகுந்துக்கு அஞ்சலி’

    இறுதிக் காட்சியில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பு அருமை என்று கூறிய மற்றொரு ரசிகர், “துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் இசையமைத்த அளவிற்கு அமரன் படத்தில் ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கவில்லை,” என்றார்.

    தனது மகனுடன் திரைப்படம் பார்க்க வந்த தந்தை ஒருவர், “கதை நகர்வதே தெரியவில்லை, அந்த அளவு சுவாரஸ்யமாக இருந்தது. ராணுவ வீரர்களின் குடும்பங்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைப் படம் தெளிவாக காட்டுகிறது. சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு நடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை,” என்றார்.

    நண்பர்களோடு சேர்ந்து படம் பார்க்க வந்த இளைஞர்கள், “அமரன் திரைப்படம் மேஜர் முகுந்தின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மிகச்சிறப்பாக இருந்தது,” என்றனர்.

  • ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

    முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதற்காக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றவர் கைது

    களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

    திருடப்பட்டதாக கூறப்படும் தங்கச் சங்கிலியின் பெறுமதி 119,000 ரூபா ஆகும்.

    இது தொடர்பில் தெரியவருவதாவது, 

    சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ள நிலையில் சிறுமியும் சிறுமியின் பாட்டியும் வீட்டில் தனிமையிலிருந்துள்ளனர்.

    இதன்போது, சிறுமியின் பாட்டி துணிகளைத் துவைத்து விட்டு அதனைக் காய வைப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.

    சிறுமியின் பாட்டி வீட்டில் இல்லாததை அவதானித்த சந்தேக நபர், வீட்டிற்குள் நுழைந்து கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

    இனங்காணாத நபரொருவர் வீட்டிலிருந்து வெளியே செல்வதைக் கண்ட பாட்டி உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது சிறுமி அலறிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.

    பின்னர், சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளதை அவதானித்த பாட்டி இது தொடர்பில் சிறுமியின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

    இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • மாத்தறையில் மண்சரிவு; 10 வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கிய பாடசாலை

    மாத்தறையில் மண்சரிவு அபாயம் காரணமாக  பாடசாலை ஒன்றின் 10 வகுப்பு மாணவர்களுக்கு வியாழக்கிழமை (24) விடுமுறை வழங்க பாடசாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

    இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தில் 06 ஆம் தரம் மற்றும் 08 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சகல சிறார்களுக்கும் வியாழக்கிழமை (24 ஆம் திகதி) பாடசாலை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தின் 06 மற்றும் 08 தரம் இயங்கும் இரண்டு மாடிக் கட்டிடத்தின் பின்புறம் உள்ள மண்மேட்டில் சற்று மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி, பெய்த கனமழையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஏழாலையில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

    யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சுன்னாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்ததுடன், இளைஞனிடம் இருந்து 840 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர். 

    கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இளைஞன் ஏற்கனவே போதை மாத்திரைகளுடன் கைதாகி அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

    அதேவேளை செவ்வாய்க்கிழமை (22) மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 1400 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

  • ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொலை!

    ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொலை!

    பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க தலைவரும், இஸ்ரேலிய எதிர்ப்பு இயக்கங்களின் அதிமுக்கிய தலைவர்களில் முதனமையானவருமாகிய இஸ்ரேலியா இராணுவததால் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஒக்ரொபர் 7ம் திகதி இஸ்ரவேல் நாட்டுக்குள் ஊடுருவி ஹமாஸ் இயக்கம் நடாத்திய படுகொலைகள், மற்றும் பொதுமக்கள் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஆரம்பித்த யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் முதன்மைக் குறியாக விளங்கிய ஹமாஸ் தலைவர் சுமார் ஒருவருட கடல யுத்தத்தின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார்.

    ஒக்ரோபர் மாதம் புதன்கிழமை 16ம் திகதி காஸா பகுதியில் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வரின் மரணம் இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்ட மரபணு பரிசோதனையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்குள் புகுந்து எல்லை தாண்டி நடாத்திய கொலைவெறியாட்டத்தில் ஒரே நாளில் 1200 க்கு மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அமெரிக்க பிரஜைகள் உட்பட 200 பொதுமக்கள் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் ஹமாஸ் மீதும் காஸா பெருநகளர் மீதும் மேற்கொண்ட கொடுரமான யுத்தம் மிகப்பெருய மானுட அவலத்தை தோற்றுலித்தது.

    ஏறத்தாழ 40000 பலஸ்தீனர்கள், பெரும்பாலும் பொதுமக்கள் கொல்லப்பட்டும், காஸா நகரம் தரை மட்டமாக்கப் பட்டும், இன்னும் தொடரும் யுத்தம் இப்போது எல்லை தாண்டி லெபனானிற்குள்ளும் பரவியுள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் சக்தி வாய்ந்த தலைவரான யஹ்யா கொல்லப்பட்டது ஹமாஸ் இயக்க தலைமையில் பெரும் வெற்றிடமொன்றை உருவாக்கியுள்ளதாகவே கருதப்படுகினறது.

    ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலடியாக கடந்த அக்டோபரில் காசாவில் ஹமாஸ் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்துஇ இதில் சுமார் 1இ200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர்இ இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் குறிக்கோள் போராளிக் குழுவை அழிப்பதைத் தவிர வேறில்லை என்று பலமுறை கூறியுள்ளனர்.

    ஆனால் இஸ்ரேலுக்கு திரு சின்வரை விட பெரிய இலக்கு எதுவும் இல்லை. பேரழிவிற்குள்ளான பகுதியில் மறைந்திருந்த கடந்த ஓராண்டில்இ அவர் இன்னும் ஹமாஸ் இராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாக மேற்பார்வையிட்டு வருவதாக நம்பப்பட்டது.

    அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேலின் இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகள்இ திரு. சின்வாரைத் தேடுவதில் பரந்த வளங்களை அர்ப்பணித்தன. ஆனால் இறுதியில்இ தெற்கு காசாவில் ஒரு நடவடிக்கையின் போது பயிற்சி படை தளபதிகளின் ஒரு பிரிவு எதிர்பாராத விதமாக அவரை எதிர்கொண்டதுஇ நான்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படிஇ கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சின்வர் என்பதனை அவர்கள் அப்போது தெரிந்திருக்கவில்லை.

    யஹ்யா சினிவரின் மரணம் பல்லாயிரக்கணக்கான காஸா மக்களைக் கொன்றுஇ இன்னும் பலரை மனிதாபிமான நெருக்கடியில் ஆழ்த்திய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

  • வன்முறை, கொலை சதித்திட்டம் தொடர்பாக இந்திய தூதர்களை கனடா வெளியேற்றியது

    வன்முறை, கொலை சதித்திட்டம் தொடர்பாக இந்திய தூதர்களை கனடா வெளியேற்றியது

    இந்திய அரசாங்கத்தை எதிர்கொள்வது அவசியம் என்று நாங்கள் உணர்ந்தோம் என்று ஆர். சி. எம். பி ஆணையர் மைக் டுஹெம் திங்களன்று அறிவித்தார்”.

    கனேடிய மண்ணில் வன்முறை மற்றும் கொலைச் சதித் திட்ட்ம் தீட்டியமை தொடர்பாக கனாடாவிற்கான இந்தியத் தூதுவர் உட்பட மேலம் சில இரஜதந்திரிகள் நாட்டை வநட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். இந்தியாவின் மோடி அரசாங்கத்திற்கும், கனடாவின் ரூடோ அரசாங்கத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் மேலும் விரிசலை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, இந்திய அரசாங்கத்தின் இராஜதந்திரிகள் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களை ஆர். சி. எம். பி சுமத்தியுள்ளது.

    இந்திய அரசாங்கத்தை எதிர்கொள்வதும்இ எங்கள் விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சில பாரதூரமான கண்டுபிடிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதும் அவசியம் என்று நாங்கள் உணர்ந்தோம் என்று ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் கமிஷனர் மைக் டுஹெம் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

    கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ பதவிகளை பயன்படுத்தி இந்திய அரசாங்கத்திற்கு நேரடியாகவோ அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மூலமாகவோ தகவல்களைச் சேகரிப்பது போன்ற இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று அவர் கூறினார்.

    இருப்பினும்இ ஆர். சி. எம். பிஇ இந்த வன்முறைச் செயல்கள்இ குற்றச் செயல்களில் இராஜதந்திர ஈடுபாடு தொடர்காக முழுமையான விபரங்களை பொதுவெளியில் வெளிவிடவில்லை.

    கனடாவின் பொறுப்பு உயர் ஸ்தானிகர் ஸ்டீவர்ட் ரோஸ் வீலர்இ துணை உயர் ஸ்தானிகர் பேட்ரிக் ஹெபர்ட் மற்றும் நான்கு இராஜதந்திரிகள் அக்டோபர் 19 ஆம் தேதி 11:59 p.அ. க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கனடாவின் இந்த நகர்வு தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில்இ இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதம், வன்முறை மற்றும் பிரிவினைவாதத்திற்கு ட்ரூடோ அரசாங்கத்தின் ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையில் மேலும் நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

    துணை ஆணையர் மார்க் ஃப்ளின் சமீபத்தில் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்திய அரசாங்க முகவர்களின் ஆதாரங்களை முன்வைக்க உயர் இந்திய சட்ட அமலாக்கத்துடன் சந்திக்க முயன்றார்இ ஆனால் தோல்வியடைந்தார்.

    கடந்த இலையுதிர்காலத்தில்இ பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரா அருகே ஜூன் 2023 இல் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய காலிஸ்தானி ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் முகவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை கனடா வெளிப்படுத்தியதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவலை வெளிப்படுத்தினார்.

    அணடமைக்காலமாக இருதரப்பு உறவுகள் முடுக்கிவிடப்பட்டு, பதட்டங்கள் குறையத் தொடங்கியபோதும் அவை ஒருபோதும் உண்மையிலேயே முழுமையாக மீளவில்லைஇ இப்போது மீண்டும் வெளிநாட்டு தலையீடு காரணமாக இருதரப்பபு உறவில் பாரிய விரிசல் விழுந்துள்ளதாகவே நோக்கப்படுகன்றது.

    இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான முடிவு நிஜ்ஜார் வழக்கில் தொடுர்புபட்ட ஆறு நபர்களை அடையாளம் கண்டுகொள்ள போதுமானஇ தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று வெளியுறவு மந்திரி மெலானி ஜோலி திங்களன்று கூறினார்.

    கனடாவில் காலிஸ்தானிய ஆர்வலர்களின் நடவடிக்கைகள் நீண்ட காலமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சவாலாகவே இருந்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளில் கொலைகளிலும், மிரட்டி பணம் பறித்தல் போன்ற பிற குற்றச் செயல்களிலும் ஈடுபட்ட கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் மீது போலீசார் குற்றத் தாக்கல் செய்துள்ளனர் என்றும் டுஹெம் கூறினார். இராஜதந்திர விலக்கு நீக்குவது குறித்து அரசாங்கம் உள் விவாதங்களை நடத்தியதுஇ எனவே காவல்துறை சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் அதிகாரிகளை நேர்காணல் செய்யலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில் வெற்றி பெறவில்லை என்று அவர் கூறினார்.

    கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் இந்தியா தலையிட்டதற்கான ஆதாரங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர் என்றும் டுஹெம் கூறினார்.

  • அமெரிக்காவையும் மீறி தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல் அடுத்து என்ன செய்யப் போகிறது?

    அமெரிக்காவையும் மீறி தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல் அடுத்து என்ன செய்யப் போகிறது?

    லெபனான் மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் இரண்டாவது வாரமாக தொடர்கிறது. அதே சமயம் இஸ்ரேலின் போர் ஓராண்டைக் கடந்து தொடர்கிறது.

    வியாழன் (அக்டோபர் 10) இரவு பெய்ரூட்டில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

    தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா., அமைதி காக்கும் படையினர் காயமடைந்தனர். போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டதற்கு இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

    வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியாவில் நடக்கும் மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்கு புதிய தாக்குதல் நடைபெற்றது.

    இவை அனைத்திற்கும் மேலாக, இரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறது. ஆனால், இஸ்ரேலின் நட்பு நாடுகள் நிதானத்தை வலியுறுத்துகின்றன.

    ஆனால், இஸ்ரேல் அதன் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதேசமயம், பல தரப்புகளில் இருந்து வரும் போர் நிறுத்தம் தொடர்பான அழுத்தங்களையும் எதிர்த்து வருகிறது. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன:

    சுலைமானி படுகொலையை தள்ளி நின்று பாராட்டிய இஸ்ரேல்

    இரானிய ஜெனரல் காசிம் சுலைமானி 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸிலிருந்து இரவு நேர விமானத்தில் இராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

    சுலைமானி இரானின் ஆக்ரோஷமான குட்ஸ் படையின் தலைவராக இருந்தார். இது வெளிநாட்டு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற இரானின் புரட்சிகர காவலர் படையின் ரகசியப் பிரிவு.

    ஜெருசலேம் என்று பொருள்படும் இந்த குழு, இராக், லெபனான், பாலத்தீனப் பகுதிகள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள வெளிநாடுகளுக்கு ஆயுதம், பயிற்சி, நிதி மற்றும் பினாமி படைகளை வழங்கும் பொறுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    அந்தச் சமயத்தில், இரானில் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு அடுத்தபடியாக சுலைமானி இரண்டாவது சக்திவாய்ந்த நபராக இருந்தார்.

    சுலைமானியின் வாகன அணிவகுப்பு விமான நிலையத்தை விட்டு வெளியேறி வந்ததும், அதன் மீது ட்ரோன் மூலமாக ஏவுகணைகள் ஏவப்பட்டன. அதில் சுலைமானி கொல்லப்பட்டார்.

    சுலைமானி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தது இஸ்ரேல் உளவுத்துறை என்றாலும், தாக்குதல் நடத்திய ட்ரோன் அமெரிக்காவிற்கு சொந்தமானது.

    இந்தத் தாக்குதலுக்கான உத்தரவை வழங்கியது அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அல்ல.

    சுலைமானி கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு, முன்னாள் அதிபர் டிரம்ப் பின்னர் ஒரு உரையில், “நெதன்யாகு எங்களைக் கைவிட்டார் என்பதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்,” என்று கூறினார். 

    டிரம்ப் ஒரு நேர்காணலில், ‘அந்தத் தாக்குதலில் இஸ்ரேல் மிகவும் தீவிரமான பங்கு வகிக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும்’, ‘அமெரிக்காவின் கடைசி சிப்பாய் எஞ்சியிருக்கும் வரை இரானுடன் அமெரிக்கா தொடர்ந்து போராட வேண்டும் என்று நெதன்யாகு விரும்புகிறார்’ என்றும் புகார் கூறினார்.

    டிரம்ப் கூறிய இந்தக் கருத்துக்கள் அந்தச் சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆனாலும், சுலைமானி படுகொலையை நெதன்யாகு பாராட்டினார். அவரைப் பொருத்தவரை, இந்தப் படுகொலைச் சம்பவத்தில் ஒருவேளை இஸ்ரேலிய அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இருந்தால், இஸ்ரேலுக்கு எதிரான பெரிய அளவிலான தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று கருதினார். இரான் அல்லது லெபனான், பாலத்தீனப் பகுதிகளில் இருக்கும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களிடமிருந்து பெரியளவிலான எதிர்வினை வந்திருக்கும் என நெதன்யாகு நினைத்தார்.

    தொடரும் தாக்குதல்

    இஸ்ரேல் இரானுடன் ஒரு மறைமுகப் போரை எதிர்கொண்டது. ஆனால் இரு தரப்புமே போரை மட்டுப்படுத்துவதில் கவனமாக இருந்தன. பெரிய அளவிலான மோதலுக்கு இருதரப்பும் தயாராக இல்லை.

    நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பெஞ்சமின் நெதன்யாகு, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகக் கட்டடத்தைத் தாக்குமாறு இஸ்ரேலிய விமானப் படைக்கு உத்தரவிட்டார். அதில் இரண்டு இரானிய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்.

    பின்னர் ஜூலை மாதம், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் இறந்த ஹெஸ்பொலாவின் உயர்மட்ட ராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்கரை படுகொலை செய்யவும் நெதன்யாகு உத்தரவிட்டார்.

    அமெரிக்காவின் மூத்தப் பத்திரிகையாளர் பாப் உட்வார்டின் புதிய நூலில் பதிவு செய்யப்பட்டிருப்பதன் படி, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தச் சம்பவங்கள் குறித்து மிகவும் கோபமாக இருக்கிறார்.

    அமெரிக்க அதிபர்களின் மாறுபட்ட நிலைப்பாடு

    வெள்ளை மாளிகை பல மாதங்களாக முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வந்த மோதலைத் தூண்டுவதில் இஸ்ரேலியப் பிரதமர் ஈடுபட்டதை அறிந்து அதிபர் ஜோ பைடன் கோபமடைந்ததாக அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

    “இஸ்ரேல் ஒரு முரட்டுத்தனமான நாடு, அங்கு வசிப்பவர்கள் முரட்டு குணம் கொண்ட மக்கள் என்ற கருத்து இஸ்ரேலைச் சுற்றி இருக்கும் நாடுகள் மத்தியில் அதிகரித்து வருகிறது,” என்று அதிபர் பைடன் கூறினார்.

    நெதன்யாகுவை ஒரு அமெரிக்க அதிபர் (டிரம்ப்) மிகவும் ‘எச்சரிக்கையாக இருக்கிறார்’ என்று குறிப்பிட்டார். அவருக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வந்த மற்றொரு அமெரிக்க அதிபர் (பைடன்) நெதன்யாகுவை மிகவும் ‘ஆக்ரோஷமானவர்’ என்று விமர்சித்தார்.

    இந்த இரண்டு நிலைப்பாடுகளின் மிகவும் தீர்க்கமான திருப்புமுனை 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தால் ஏற்பட்டது. இது இஸ்ரேலின் வரலாற்றில் கொடூரமான நாளாகும். இஸ்ரேலின் அரசியல், ராணுவ, மற்றும் உளவுத்துறையின் தோல்விகளை அந்த தினம் அம்பலப்படுத்தியது.

    நெதன்யாகு அமெரிக்க அதிபரின் பேச்சைக் கேட்கவில்லை என்பதுதான் இரு நிலைப்பாடுகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை.

    இஸ்ரேலின் போர் தொடர்பாக சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறது.

    இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் தாக்குதல்களின் தீவிரம் மற்றும் இஸ்ரேலிய சமூகத்தின் மீதான அதன் தாக்கம், அதன் பாதுகாப்பு உணர்வு ஆகியவை இஸ்ரேலின் எதிர்வினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கிறது.

    அமெரிக்க நிர்வாகம் இஸ்ரேலுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குகிறது. ஆனால் பாலத்தீனத்தில் பொதுமக்களின் மரணங்கள் மற்றும் காஸாவின் துயரமான சூழல் ஆகியவை அமெரிக்காவைச் சங்கடப்படுத்தியது. அதன் நிர்வாகத்திற்கு அரசியல் ரீதியாகத் தீங்கு விளைவிக்கும் என அமெரிக்கா கருதியது.

    அமெரிக்காவிடமிருந்து அதிக மானியங்களைப் பெறும் ஒரு நாட்டை வல்லரசு நாட்டால் கட்டுப்படுத்த முடியாத நிலை, அமெரிக்காவின் விமர்சகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

    ஆனாலும், ஏப்ரலில் இரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது, அந்த ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு அமெரிக்கப் போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. இஸ்ரேலின் பாதுகாப்பு அதன் மிகப்பெரிய கூட்டாளிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இது பிரதிபலிக்கிறது. ஆனால், இஸ்ரேல் போரின் போக்கை மாற்றும் அழுத்தங்களை கண்டுகொள்ளவில்லை.

    இந்த வருடம், அமெரிக்காவின் அனுமதியின்றி ஹெஸ்பொலாவுடன் மோதலை அதிகரிக்க இஸ்ரேல் முடிவு செய்தது.

    நீண்ட காலம் இஸ்ரேல் பிரதமராக இருந்துவரும் நெதன்யாகுவுக்கு அமெரிக்காவின் அழுத்தத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியும். அதை முற்றிலும் புறக்கணிக்காவிட்டாலும், அதைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பதை தனது 20 ஆண்டு கால அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார்.

    குறிப்பாக, தேர்தல் நடக்கும் சமயத்தில், அமெரிக்கா தனது போக்கில் இருந்து விலகும்படி கட்டாயப்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதை நெதன்யாகு அறிவார். அவர் எப்போதும் இதை நம்புகிறார். அதே நேரம், இஸ்ரேல் அமெரிக்காவின் எதிரிகளுடன் போராடுகிறது என்பது அதற்குத் தெரியும்.

    சமீபத்திய மோதலைப் பொருத்தவரை, நெதன்யாகு இஸ்ரேலிய அரசியல் போக்கிலிருந்து விலகிச் செயல்படுகிறார் என்று கருதுவது தவறானது. ஏதாவது அழுத்தம் ஏற்பட்டால், ஹெஸ்பொலாவுக்கு எதிராக மட்டுமல்ல, இரானுக்கு எதிராகவும் அவர்கள் வலுவான தாக்குதலை நடத்த வேண்டியிருக்கும்.

    கடந்த மாதம், அமெரிக்காவும் பிரான்சும் லெபனான் தொடர்பான போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை முன்வைத்த போது, இந்த 21 நாள் போர் நிறுத்தத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பு இஸ்ரேலிடம் இருந்து வந்தது. எதிர்ப்பு தெரிவித்ததில் இஸ்ரேலின் முக்கிய இடதுசாரிப் பிரிவுகள் மற்றும் வலதுசாரிக் கட்சிகளும் அடக்கம்.

    தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இஸ்ரேல்

    இஸ்ரேல் இப்போது தனது போரைத் தொடர்வதில் உறுதியாக உள்ளது. ஏனெனில், அது சர்வதேச அழுத்தங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும் என்று கருதுவதால் மட்டுமல்ல, அச்சுறுத்தல்களுக்கான சகிப்புத்தன்மை அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகு மாறிவிட்டது.

    பல ஆண்டுகளாக, வடக்கு இஸ்ரேலில் உள்ள கலிலியில் தாக்குதல் நடத்துவதை ஹெஸ்பொலா இலக்காகக் கொண்டுள்ளது. இப்போது இஸ்ரேலிய மக்கள் ஆயுதமேந்திய பலர் தங்கள் வீடுகளுக்குள் நுழையும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர், இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியாது, அது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

    அச்சுறுத்தல் பற்றிய இஸ்ரேலின் பார்வையும் மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளில், ஒரு பரவலான போரைத் தூண்டக்கூடிய பல சம்பவங்கள் நடந்துள்ளன. உதாரணமாக டெஹ்ரான், பெய்ரூட், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் ஆகிய நகரங்கள் மீதான குண்டுகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்.

    டெஹ்ரானில் இரானின் விருந்தினராக இருந்தபோது ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் படுகொலை செய்தது. இது ஹசன் நஸ்ரல்லா உட்பட ஹெஸ்பொலாவின் முழு தலைமையையும் நீக்கியது. சிரியாவில் உள்ள தூதரகக் கட்டடத்தில் இருந்த இரானிய மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

    ஹெஸ்பொலா இதுவரை 9,000 ஏவுகணைகளை இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவியுள்ளது. டெல் அவிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமும் அது தாக்குதல் நடத்தியது. இரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதிகளும் இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவுகணைகளை ஏவியுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ராணுவத்தால் இடைமறித்து அழிக்கப்பட்டன.

    கடந்த ஆறு மாதங்களில் இஸ்ரேல் மீது இரான் ஒரு முறை அல்ல இரண்டு முறை பெரியளவிலான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த இரண்டு தாக்குதல்களிலும் அது 500 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் மீது தரைவழித் தாக்குதல் நடத்தி வருகிறது. 

    இது கடந்த காலத்தில் நடந்திருந்தால், இந்தச் சம்பவங்களில் ஏதேனும் ஒன்று கூட பரவலான பிராந்திய யுத்தத்திற்கு வழிவகுத்திருக்கும். கடந்த காலங்களில் பொதுவாக எச்சரிக்கையாக இருந்து ஆபத்துகளைத் தவிர்த்து வந்த நெதன்யாகுவின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • தற்போதைய களச் சூழலில் தமிழரசுக் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்-ஸ்ரீதரன்  வேண்டுகோள்

    தற்போதைய களச் சூழலில் தமிழரசுக் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்-ஸ்ரீதரன் வேண்டுகோள்

    தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசு கட்சியினுடைய வெற்றிக்காக  உழைக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.  

    கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான அறிவகத்தில் இன்று சனிக்கிழமை (12) விஜயதசமி விழாவும் மாவட்டத்தின் இலங்கை தமிழரசு கட்சியினுடைய வட்டார உறுப்பினர்களுக்குமான  கலந்துரையாடல் நடைபெற்றது.     

    இதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.  

    அவர் மேலும் கூறுகையில்,  

    நாங்கள் ஒரு பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள். தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எங்களது முழு செயற்பாடுகளையும் முன்னிறுத்தியிருந்தோம்.  

    குறிப்பாக, தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற இனப்படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழ் மக்களுக்கான வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வு… இந்த கோரிக்கைகளை முன்வைத்த பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள் என்பது உண்மையாகும்.  

    அதற்காக பாவிக்கப்பட்ட சங்கு சின்னத்தை வேறு சிலர் கையில் எடுத்திருப்பது என்பது முரண்பாடான ஒரு விடயமாகும். அதனை அவர்கள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என்பது எனது கருத்தாகும்.   

    குறிப்பாக, தமிழரது ஒற்றுமை தேசத் திரட்சி. தமிழர்களை ஒன்றுபடுத்துதல் என்ற காரியத்துக்காக ஆற்றப்பட்ட அந்த விடயத்தில் தமது சின்னமாக அதனை கையில் எடுத்திருப்பது ஒரு முரணான விடயம்.    

    ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெறுகின்றன. பல்வேறு சின்னங்களுக்காக மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்றும் அந்த அடிப்படையிலே நாங்களும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு ஆதரவுகளை வழங்கி இருக்கின்றோம். வேட்பாளர்கள் நியமனங்களில் திருப்தி இருக்கிறதா, இல்லையா என்பதற்கு அப்பால் இப்போதைய காலச் சூழலில் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்கவேண்டும். அதுவே எனது  நிலைப்பாடு என்றார். 

    இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் முதலானோர் கலந்துகொண்டிருந்தனர்.