டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத்தில் இன்று (அக்டோபர் 21, 2025) நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் (Liberal Democratic Party – LDP) தலைவர் சனே தகாய்ச்சி (Sanae Takaichi), நாட்டின் 104-வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளார். ஜப்பான் வரலாற்றில் பிரதமரான முதல் பெண்மணி இவரே ஆவார்.
நாடாளுமன்றத்தில் வெற்றி
64 வயதான சனே தகாய்ச்சி (Sanae Takaichi), நாட்டின் கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார். முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) ராஜினாமா செய்ததை அடுத்து, லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையை இழந்திருந்த நிலையில், வலதுசாரி ‘ஜப்பான் புதுமைக்கட்சி’யுடன் (Japan Innovation Party – JIP) கூட்டணி அமைத்ததன் மூலம், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 237 வாக்குகளைத் தகாய்ச்சி பெற்றார். இதைத் தொடர்ந்து, இவர் முறைப்படி ஜப்பான் பேரரசரைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர், நாட்டின் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.
யார் இந்த சனே தகாய்ச்சி? (Who is Sanae Takaichi?)
சானே தகாய்ச்சி (Sanae Takaichi) பழமைவாதக் கொள்கைகளுக்காக அறியப்பட்டவர். இவர் மத்திய ஜப்பானில் உள்ள நாரா மாகாணத்தில் பிறந்தவர்.
அரசியல் பின்னணி: மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் (Shinzo Abe) தீவிர ஆதரவாளராகவும், சீடராகவும் இவர் கருதப்படுகிறார். அபேயின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர், தகவல் தொடர்பு அமைச்சர், பொருளாதாரப் பாதுகாப்பு அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்.
‘இரும்புப் பெண்மணி’: இங்கிலாந்தின் மறைந்த முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் (Margaret Thatcher) கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சனே தகாய்ச்சி (Sanae Takaichi), தனது உறுதியான மற்றும் பழமைவாத நிலைப்பாடுகளுக்காக ஜப்பானின் ‘இரும்புப் பெண்மணி’ (Iron Lady) என்று ஊடகங்களால் அழைக்கப்படுகிறார்.
கொள்கைகள்: இவர் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துதல், பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நிதிச் செலவினம், சீனாவுக்கு எதிரான தீவிரமான வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை வலியுறுத்துகிறார். அதே சமயம், இவர் பாரம்பரியமான சமூக நிலைப்பாடுகளை ஆதரிப்பவர், அதாவது ஒரே பாலினத் திருமணங்களை எதிர்ப்பவர் மற்றும் ஏகாதிபத்திய குடும்பத்தில் ஆண் வழி வாரிசுரிமையையே ஆதரிப்பவர்.
காத்திருக்கும் சவால்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்குப் பின்னரும், சனே தகாய்ச்சிக்கு (Sanae Takaichi) சவால்கள் காத்திருக்கின்றன. ஆளும் கூட்டணியின் பலம் சற்று குறைவாக இருப்பதால், நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றுவது சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் மற்றும் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் அழுத்தங்கள் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளுக்கும் இவர் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகாய்ச்சி (Sanae Takaichi) பதவியேற்றிருப்பது, பாலின சமத்துவத்தில் பின்தங்கியிருக்கும் ஜப்பானிய அரசியல் களத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதி உடன்பாடு எட்டப்படும் வரை ரஷ்யா மீது பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தற்போது உக்ரைனை போர்க்களத்தில் கடுமையாக தாக்கி வருகிறது என்றும் இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் இதற்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை புகழ்ந்து பேசியிருந்தார். உக்ரைன் தலைவர்தான் ரஷ்யாவுடன் அமைதிக்கு விரும்பவில்லை என்று பொய்யான குற்றத்தினை சுமத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது அவருடைய கருத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைனுடன் உறவை கையாள்வது கடினமாக இருக்கிறது என்றும் ரஷ்ய அதிபர் புடின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் மீண்டும் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்;ளைமாளிகை அலுவலகத்தில் கடுமையாக விமர்சித்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெலென்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்ததோடு, உக்ரைன்தான் போரை ஆரம்பித்தது என்றும் குற்றம் சாட்டினார். உக்ரைன் போர் பிப்ரவரி 24, 2022 அன்று புடினால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கி வந்த இராணுவ உதவி மற்றும் உளவுத் தகவல்களை நிறுத்தி வைத்துள்ளது. இது ரஷ்யா, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து பெரிய அளவிலான ஏவுகணை மற்றும ட்ரோன்; தாக்குதல் நடத்த காரணமாக அமைந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை காலை, டிரம்ப் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். ரஷ்யா, உக்ரைனை கடுமையாக தாக்கி வருகிறது என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் தெரிவித்தார்.
உக்ரைனுடனான இராணுவ ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தியதால்தான் புடின் இவ்வாறு செயல்படுகிறாரா என்ற கேள்விக்கு, யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள் என்று டிரம்ப் பதிலளித்தார். மேலும் உக்ரைன் சமாதானத்திற்கு தயாராக இருக்கிறதா என்பதை நான் அறிய விரும்புகிறேன். ஆனால் அவர்கள் தயாராக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய அவரது றுத் வலைத்தளத்தில் பதிவு செய்த கருத்தில், டிரம்ப், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதி உடன்பாடு எட்டப்படும் வரை ரஷ்யா மீது பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள், தாமதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
இந்த பொருளாதாரத் தடைகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து எந்த தகவலும் அவர் வெளியிடவில்லை.
ரஷ்யா ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறிவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எண்ணெயை விற்பனை செய்து, கஜகஸ்தான் போன்ற நாடுகள் மூலம் மேற்கு நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து தடைகளை சமாளித்து வருகிறது.
சீனா, ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களை வழங்கி உதவி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் சீனா இதனை மறுத்துள்ளது.
அமைதி உடன்படிக்கைக்கான அழுத்தம் உக்ரைன் மீது மட்டுமே செலுத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. டிரம்ப்பின் இந்த அச்சுறுத்தல் ஒரு சமநிலையை காட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம்.
டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் ரஷ்ய அதிபருடன் 90 நிமிடம் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்திருந்தார். அந்த தொலைபேசி உரையாடலில் என்ன விவாதிக்கப்பட்டது, என்ன உடன்பாடுகள் எட்டப்பட்டன என்பது இதுவரை வெளிவரவில்லை.
தற்போதைய சூழலில் விளாடிமிர் புடின் ஒரு புத்திசாலியான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார். டிரம்பின் இந்த பொருளாதாரத் தடை அச்சுறுத்தல் புடினுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க தலைவரும், இஸ்ரேலிய எதிர்ப்பு இயக்கங்களின் அதிமுக்கிய தலைவர்களில் முதனமையானவருமாகிய இஸ்ரேலியா இராணுவததால் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஒக்ரொபர் 7ம் திகதி இஸ்ரவேல் நாட்டுக்குள் ஊடுருவி ஹமாஸ் இயக்கம் நடாத்திய படுகொலைகள், மற்றும் பொதுமக்கள் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஆரம்பித்த யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் முதன்மைக் குறியாக விளங்கிய ஹமாஸ் தலைவர் சுமார் ஒருவருட கடல யுத்தத்தின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார்.
ஒக்ரோபர் மாதம் புதன்கிழமை 16ம் திகதி காஸா பகுதியில் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வரின் மரணம் இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்ட மரபணு பரிசோதனையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்குள் புகுந்து எல்லை தாண்டி நடாத்திய கொலைவெறியாட்டத்தில் ஒரே நாளில் 1200 க்கு மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அமெரிக்க பிரஜைகள் உட்பட 200 பொதுமக்கள் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் ஹமாஸ் மீதும் காஸா பெருநகளர் மீதும் மேற்கொண்ட கொடுரமான யுத்தம் மிகப்பெருய மானுட அவலத்தை தோற்றுலித்தது.
ஏறத்தாழ 40000 பலஸ்தீனர்கள், பெரும்பாலும் பொதுமக்கள் கொல்லப்பட்டும், காஸா நகரம் தரை மட்டமாக்கப் பட்டும், இன்னும் தொடரும் யுத்தம் இப்போது எல்லை தாண்டி லெபனானிற்குள்ளும் பரவியுள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் சக்தி வாய்ந்த தலைவரான யஹ்யா கொல்லப்பட்டது ஹமாஸ் இயக்க தலைமையில் பெரும் வெற்றிடமொன்றை உருவாக்கியுள்ளதாகவே கருதப்படுகினறது.
ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலடியாக கடந்த அக்டோபரில் காசாவில் ஹமாஸ் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்துஇ இதில் சுமார் 1இ200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர்இ இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் குறிக்கோள் போராளிக் குழுவை அழிப்பதைத் தவிர வேறில்லை என்று பலமுறை கூறியுள்ளனர்.
ஆனால் இஸ்ரேலுக்கு திரு சின்வரை விட பெரிய இலக்கு எதுவும் இல்லை. பேரழிவிற்குள்ளான பகுதியில் மறைந்திருந்த கடந்த ஓராண்டில்இ அவர் இன்னும் ஹமாஸ் இராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாக மேற்பார்வையிட்டு வருவதாக நம்பப்பட்டது.
அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேலின் இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகள்இ திரு. சின்வாரைத் தேடுவதில் பரந்த வளங்களை அர்ப்பணித்தன. ஆனால் இறுதியில்இ தெற்கு காசாவில் ஒரு நடவடிக்கையின் போது பயிற்சி படை தளபதிகளின் ஒரு பிரிவு எதிர்பாராத விதமாக அவரை எதிர்கொண்டதுஇ நான்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படிஇ கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சின்வர் என்பதனை அவர்கள் அப்போது தெரிந்திருக்கவில்லை.
யஹ்யா சினிவரின் மரணம் பல்லாயிரக்கணக்கான காஸா மக்களைக் கொன்றுஇ இன்னும் பலரை மனிதாபிமான நெருக்கடியில் ஆழ்த்திய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
லெபனான் மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் இரண்டாவது வாரமாக தொடர்கிறது. அதே சமயம் இஸ்ரேலின் போர் ஓராண்டைக் கடந்து தொடர்கிறது.
வியாழன் (அக்டோபர் 10) இரவு பெய்ரூட்டில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா., அமைதி காக்கும் படையினர் காயமடைந்தனர். போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டதற்கு இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியாவில் நடக்கும் மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்கு புதிய தாக்குதல் நடைபெற்றது.
இவை அனைத்திற்கும் மேலாக, இரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறது. ஆனால், இஸ்ரேலின் நட்பு நாடுகள் நிதானத்தை வலியுறுத்துகின்றன.
ஆனால், இஸ்ரேல் அதன் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதேசமயம், பல தரப்புகளில் இருந்து வரும் போர் நிறுத்தம் தொடர்பான அழுத்தங்களையும் எதிர்த்து வருகிறது. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன:
சுலைமானி படுகொலையை தள்ளி நின்று பாராட்டிய இஸ்ரேல்
இரானிய ஜெனரல் காசிம் சுலைமானி 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸிலிருந்து இரவு நேர விமானத்தில் இராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
சுலைமானி இரானின் ஆக்ரோஷமான குட்ஸ் படையின் தலைவராக இருந்தார். இது வெளிநாட்டு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற இரானின் புரட்சிகர காவலர் படையின் ரகசியப் பிரிவு.
ஜெருசலேம் என்று பொருள்படும் இந்த குழு, இராக், லெபனான், பாலத்தீனப் பகுதிகள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள வெளிநாடுகளுக்கு ஆயுதம், பயிற்சி, நிதி மற்றும் பினாமி படைகளை வழங்கும் பொறுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தச் சமயத்தில், இரானில் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு அடுத்தபடியாக சுலைமானி இரண்டாவது சக்திவாய்ந்த நபராக இருந்தார்.
சுலைமானியின் வாகன அணிவகுப்பு விமான நிலையத்தை விட்டு வெளியேறி வந்ததும், அதன் மீது ட்ரோன் மூலமாக ஏவுகணைகள் ஏவப்பட்டன. அதில் சுலைமானி கொல்லப்பட்டார்.
சுலைமானி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தது இஸ்ரேல் உளவுத்துறை என்றாலும், தாக்குதல் நடத்திய ட்ரோன் அமெரிக்காவிற்கு சொந்தமானது.
இந்தத் தாக்குதலுக்கான உத்தரவை வழங்கியது அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அல்ல.
சுலைமானி கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு, முன்னாள் அதிபர் டிரம்ப் பின்னர் ஒரு உரையில், “நெதன்யாகு எங்களைக் கைவிட்டார் என்பதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்,” என்று கூறினார்.
டிரம்ப் ஒரு நேர்காணலில், ‘அந்தத் தாக்குதலில் இஸ்ரேல் மிகவும் தீவிரமான பங்கு வகிக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும்’, ‘அமெரிக்காவின் கடைசி சிப்பாய் எஞ்சியிருக்கும் வரை இரானுடன் அமெரிக்கா தொடர்ந்து போராட வேண்டும் என்று நெதன்யாகு விரும்புகிறார்’ என்றும் புகார் கூறினார்.
டிரம்ப் கூறிய இந்தக் கருத்துக்கள் அந்தச் சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆனாலும், சுலைமானி படுகொலையை நெதன்யாகு பாராட்டினார். அவரைப் பொருத்தவரை, இந்தப் படுகொலைச் சம்பவத்தில் ஒருவேளை இஸ்ரேலிய அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இருந்தால், இஸ்ரேலுக்கு எதிரான பெரிய அளவிலான தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று கருதினார். இரான் அல்லது லெபனான், பாலத்தீனப் பகுதிகளில் இருக்கும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களிடமிருந்து பெரியளவிலான எதிர்வினை வந்திருக்கும் என நெதன்யாகு நினைத்தார்.
தொடரும் தாக்குதல்
இஸ்ரேல் இரானுடன் ஒரு மறைமுகப் போரை எதிர்கொண்டது. ஆனால் இரு தரப்புமே போரை மட்டுப்படுத்துவதில் கவனமாக இருந்தன. பெரிய அளவிலான மோதலுக்கு இருதரப்பும் தயாராக இல்லை.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பெஞ்சமின் நெதன்யாகு, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகக் கட்டடத்தைத் தாக்குமாறு இஸ்ரேலிய விமானப் படைக்கு உத்தரவிட்டார். அதில் இரண்டு இரானிய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்.
பின்னர் ஜூலை மாதம், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் இறந்த ஹெஸ்பொலாவின் உயர்மட்ட ராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்கரை படுகொலை செய்யவும் நெதன்யாகு உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் மூத்தப் பத்திரிகையாளர் பாப் உட்வார்டின் புதிய நூலில் பதிவு செய்யப்பட்டிருப்பதன் படி, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தச் சம்பவங்கள் குறித்து மிகவும் கோபமாக இருக்கிறார்.
அமெரிக்க அதிபர்களின் மாறுபட்ட நிலைப்பாடு
வெள்ளை மாளிகை பல மாதங்களாக முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வந்த மோதலைத் தூண்டுவதில் இஸ்ரேலியப் பிரதமர் ஈடுபட்டதை அறிந்து அதிபர் ஜோ பைடன் கோபமடைந்ததாக அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
“இஸ்ரேல் ஒரு முரட்டுத்தனமான நாடு, அங்கு வசிப்பவர்கள் முரட்டு குணம் கொண்ட மக்கள் என்ற கருத்து இஸ்ரேலைச் சுற்றி இருக்கும் நாடுகள் மத்தியில் அதிகரித்து வருகிறது,” என்று அதிபர் பைடன் கூறினார்.
நெதன்யாகுவை ஒரு அமெரிக்க அதிபர் (டிரம்ப்) மிகவும் ‘எச்சரிக்கையாக இருக்கிறார்’ என்று குறிப்பிட்டார். அவருக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வந்த மற்றொரு அமெரிக்க அதிபர் (பைடன்) நெதன்யாகுவை மிகவும் ‘ஆக்ரோஷமானவர்’ என்று விமர்சித்தார்.
இந்த இரண்டு நிலைப்பாடுகளின் மிகவும் தீர்க்கமான திருப்புமுனை 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தால் ஏற்பட்டது. இது இஸ்ரேலின் வரலாற்றில் கொடூரமான நாளாகும். இஸ்ரேலின் அரசியல், ராணுவ, மற்றும் உளவுத்துறையின் தோல்விகளை அந்த தினம் அம்பலப்படுத்தியது.
நெதன்யாகு அமெரிக்க அதிபரின் பேச்சைக் கேட்கவில்லை என்பதுதான் இரு நிலைப்பாடுகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை.
இஸ்ரேலின் போர் தொடர்பாக சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் தாக்குதல்களின் தீவிரம் மற்றும் இஸ்ரேலிய சமூகத்தின் மீதான அதன் தாக்கம், அதன் பாதுகாப்பு உணர்வு ஆகியவை இஸ்ரேலின் எதிர்வினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கிறது.
அமெரிக்க நிர்வாகம் இஸ்ரேலுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குகிறது. ஆனால் பாலத்தீனத்தில் பொதுமக்களின் மரணங்கள் மற்றும் காஸாவின் துயரமான சூழல் ஆகியவை அமெரிக்காவைச் சங்கடப்படுத்தியது. அதன் நிர்வாகத்திற்கு அரசியல் ரீதியாகத் தீங்கு விளைவிக்கும் என அமெரிக்கா கருதியது.
அமெரிக்காவிடமிருந்து அதிக மானியங்களைப் பெறும் ஒரு நாட்டை வல்லரசு நாட்டால் கட்டுப்படுத்த முடியாத நிலை, அமெரிக்காவின் விமர்சகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
ஆனாலும், ஏப்ரலில் இரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது, அந்த ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு அமெரிக்கப் போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. இஸ்ரேலின் பாதுகாப்பு அதன் மிகப்பெரிய கூட்டாளிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இது பிரதிபலிக்கிறது. ஆனால், இஸ்ரேல் போரின் போக்கை மாற்றும் அழுத்தங்களை கண்டுகொள்ளவில்லை.
இந்த வருடம், அமெரிக்காவின் அனுமதியின்றி ஹெஸ்பொலாவுடன் மோதலை அதிகரிக்க இஸ்ரேல் முடிவு செய்தது.
நீண்ட காலம் இஸ்ரேல் பிரதமராக இருந்துவரும் நெதன்யாகுவுக்கு அமெரிக்காவின் அழுத்தத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியும். அதை முற்றிலும் புறக்கணிக்காவிட்டாலும், அதைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பதை தனது 20 ஆண்டு கால அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார்.
குறிப்பாக, தேர்தல் நடக்கும் சமயத்தில், அமெரிக்கா தனது போக்கில் இருந்து விலகும்படி கட்டாயப்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதை நெதன்யாகு அறிவார். அவர் எப்போதும் இதை நம்புகிறார். அதே நேரம், இஸ்ரேல் அமெரிக்காவின் எதிரிகளுடன் போராடுகிறது என்பது அதற்குத் தெரியும்.
சமீபத்திய மோதலைப் பொருத்தவரை, நெதன்யாகு இஸ்ரேலிய அரசியல் போக்கிலிருந்து விலகிச் செயல்படுகிறார் என்று கருதுவது தவறானது. ஏதாவது அழுத்தம் ஏற்பட்டால், ஹெஸ்பொலாவுக்கு எதிராக மட்டுமல்ல, இரானுக்கு எதிராகவும் அவர்கள் வலுவான தாக்குதலை நடத்த வேண்டியிருக்கும்.
கடந்த மாதம், அமெரிக்காவும் பிரான்சும் லெபனான் தொடர்பான போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை முன்வைத்த போது, இந்த 21 நாள் போர் நிறுத்தத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பு இஸ்ரேலிடம் இருந்து வந்தது. எதிர்ப்பு தெரிவித்ததில் இஸ்ரேலின் முக்கிய இடதுசாரிப் பிரிவுகள் மற்றும் வலதுசாரிக் கட்சிகளும் அடக்கம்.
தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் இப்போது தனது போரைத் தொடர்வதில் உறுதியாக உள்ளது. ஏனெனில், அது சர்வதேச அழுத்தங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும் என்று கருதுவதால் மட்டுமல்ல, அச்சுறுத்தல்களுக்கான சகிப்புத்தன்மை அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகு மாறிவிட்டது.
பல ஆண்டுகளாக, வடக்கு இஸ்ரேலில் உள்ள கலிலியில் தாக்குதல் நடத்துவதை ஹெஸ்பொலா இலக்காகக் கொண்டுள்ளது. இப்போது இஸ்ரேலிய மக்கள் ஆயுதமேந்திய பலர் தங்கள் வீடுகளுக்குள் நுழையும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர், இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியாது, அது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
அச்சுறுத்தல் பற்றிய இஸ்ரேலின் பார்வையும் மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளில், ஒரு பரவலான போரைத் தூண்டக்கூடிய பல சம்பவங்கள் நடந்துள்ளன. உதாரணமாக டெஹ்ரான், பெய்ரூட், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் ஆகிய நகரங்கள் மீதான குண்டுகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்.
டெஹ்ரானில் இரானின் விருந்தினராக இருந்தபோது ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் படுகொலை செய்தது. இது ஹசன் நஸ்ரல்லா உட்பட ஹெஸ்பொலாவின் முழு தலைமையையும் நீக்கியது. சிரியாவில் உள்ள தூதரகக் கட்டடத்தில் இருந்த இரானிய மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
ஹெஸ்பொலா இதுவரை 9,000 ஏவுகணைகளை இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவியுள்ளது. டெல் அவிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமும் அது தாக்குதல் நடத்தியது. இரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதிகளும் இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவுகணைகளை ஏவியுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ராணுவத்தால் இடைமறித்து அழிக்கப்பட்டன.
கடந்த ஆறு மாதங்களில் இஸ்ரேல் மீது இரான் ஒரு முறை அல்ல இரண்டு முறை பெரியளவிலான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த இரண்டு தாக்குதல்களிலும் அது 500 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் மீது தரைவழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது கடந்த காலத்தில் நடந்திருந்தால், இந்தச் சம்பவங்களில் ஏதேனும் ஒன்று கூட பரவலான பிராந்திய யுத்தத்திற்கு வழிவகுத்திருக்கும். கடந்த காலங்களில் பொதுவாக எச்சரிக்கையாக இருந்து ஆபத்துகளைத் தவிர்த்து வந்த நெதன்யாகுவின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.