அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு உதவும் வகையில் 6.5 பில்லியன் டொலர்களுக்கும் மேலான உதவித் திட்டத்தை கனடா அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. மேலும் வேலையிழப்பு காப்பீட்டு விதிகளிலும் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கனனேடிய தயாரிப்புகளுக்கான புதிய புதிய சந்தைகளை கண்டுபிடிக்கவும், அமெரிக்க வரிகளின் தாக்கங்களுக்கு பதிலளிக்கவும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளில் 5 பில்லியன் டொலர்களை செலவிட கனேடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க வரிகளால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் உள்ள வணிகங்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன்களை வழங்க 500 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளது.
கனடாவின் விவசாயம் மற்றும் உணவுற்பத்தித்துறையில்; ஏற்படக்கூடிய பணப்புழக்கச் சவால்களுக்கு உதவும் வகையில் ஃபார்ம் கிரெடிட் கனடா மூலம் கூடுதலாக 1 பில்லியன் கடன் வழங்கப்படும்.
தொழிலாளர் அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் செய்தியாளர்களிடம் கூறுகையில் எங்கள் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், இந்த நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்பதற்கும் அரசாங்கம் என்ற முறையில் நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை இன்று நான் கோடிட்டுக் காட்டுகிறேன். எந்த சூழ்நிலையிலும் அவர்களைக் காப்பாற்றுவோம் என்று அவர் சூளுரைத்தார். அவருடன் சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி என்.ஜி மற்றும் சிறு வணிக அமைச்சர் ரெச்சி வால்டெஸ் ஆகியோரரும் உடனிருந்தனர்.
குறிப்பாக தொழிலாளர்களுக்காக கனடாவின் தொழிலிழந்தோர் வேலைப் பகிர்வு திட்டத்தை எளிதாக்கும் தற்காலிக மாற்றங்களை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
மெக்கின்னன் கூறுகையில் வேலைப் பகிர்வு திட்டம் பரவலாக அறியப்பட்ட திட்டம் அல்ல. ஆனால் இது ஒரு முக்கியமான திட்டம். வேலையின்மை இல்லாமல் தொழிலாளர்களை பணியில் வைத்திருக்க இந்த திட்டம் உதவுகிறது. ஊழியர்களின் வேலை நேரத்தை தற்காலிகமாக குறைப்பதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் வரை தொழிலாளர்கள் பணியில் இருப்பார்கள்”.
இந்த மாற்றங்களில் ஒப்பந்தங்களின் அதிகபட்ச காலத்தை 38 வாரங்களில் இருந்து 76 வாரங்களாக அதிகரிப்பது லாப நோக்கமுள்ள மற்றும் தொண்டு நிறுவனங்கள் பருவகால வேலைகளில் பணிபுரிபவர்கள் போன்றோரும் இந்த திட்டத்தில் பயனடையலாம்.
ஏற்றுமதி மேம்பாட்டு கனடாவின் 5 பில்லியன் திட்டம் குறித்து என்.ஜி கூறுகையில்இ நிறுவனங்கள் தற்போதுள்ள ஒப்பந்தங்களை நிர்வகிக்கவும் அமெரிக்க விற்பனையில் ஏற்படக்கூடிய குறைவுகளைச் சமாளிக்கவும் உதவும். மேலும் பொருட்களை அனுப்பும்போது அல்லது சர்வதேச அளவில் சேவைகளை வழங்கும் போது வெளிநாட்டு வாடிக்கையாளர்களினால் பணம் செலுத்த முடியாமல் போனால் ஏற்படும் இழப்புகளிலிருந்து நிறுவனங்களைப் பாதுகாக்க கடன் காப்பீடு வழங்கப்படும். செலவுகளை நிலைப்படுத்தவும் பாதகமான நாணய நகர்வுகளிலிருந்து லாப வரம்புகளைப் பாதுகாக்கவும் நாணய பரிமாற்ற வசதி உத்தரவாதமும் வழங்கப்படும்”.
புதிய நிதியாக கூ500 மில்லியன் வழங்கும் கனடா வணிக மேம்பாட்டு வங்கி (டீனுஊ) அமெரிக்க வரிகள் காரணமாக ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அல்லது செலவுகள் அதிகரித்தாலோ, நிதி ரீதியாக நேரடி பாதிப்புகளை சந்தித்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த உதவி கிடைக்கும என்று தெரிவித்துள்ளது.
சில கனடிய பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளுக்கு ஏப்ரல் 2 வரை தற்காலிக விலக்கு அளிக்கப்படும் என்று ட்ரம்ப் வியாழக்கிழமை அறிவித்தார். அதன்பிறகு உலகளாவிய இறக்குமதிகள் மீது வரிகள் விதிக்கப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்தார். இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது அடுத்த வாரம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ள 25 சதவீத வரிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
கனடாவின் பால் பொருட்கள் மீது 250 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கனடாவின் மரத் தொழில் துறையையும் குறிவைத்துள்ளதாகவும் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய சட்ட மாற்றங்கள் தேவையில்லாமல் வேலையிழப்போர்;க்கான காப்புறுதி நடவடிக்கைகளை செயல்படுத்த முடியும் என்று மெக்கின்னன் வெள்ளிக்கிழமை கூறினார். ஜனவரி மாதம் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் மார்ச் 24 வரை பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
மேலும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேர்தல் நெருங்கினால் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் என்ற கேள்விக்கு அமைச்சர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அமைச்சர்களாகவே இருப்பார்கள். ஆனால் முக்கியமான முடிவுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பது மரபு. அது அவசரநிலைகளுக்கு பொருந்தாது” என்று மெக்கின்னன் கூறினார்.
முழு அளவிலான வரிகள் மற்றும் முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரம் ஆகியவை தற்போதைக்கு “கருத்தியல்” ஆக இருந்தாலும்இ அமெரிக்காவின் பதிலடிக்கு கனடாவின் பதில் ஒரு பெரிய விவாதமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ட்ரம்ப்பின் மிரட்டல்களுக்கு பதிலளிக்கும் வகையில்இ என்டிபி தலைவர் ஜெக்மீத் சிங் தனது கட்சியின் “தொழிலாளர்களுக்கு முன்னுரிமை” திட்டத்தை வெளியிட்டார். அதில் நுஐ ஐ அணுகுவதில் உள்ள தடைகளை நீக்குவதுஇ “ஆபத்தில் உள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு” சலுகைகளை அறிமுகப்படுத்துவதுஇ சலுகைகளின் காலத்தை 50 வாரங்களாக நீட்டிப்பதுஇ ஒரு வார காத்திருப்பு காலத்தை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் அடங்கும்.
பந்து ஒவ்வொரு நாளும் துள்ளிக் கொண்டே இருப்பதால தான் மேலும் மாற்றங்களை அறிமுகப்படுத்தவில்லை என்று மெக்கின்னன் கூறினார்.
அமெரிக்காவிலிருந்து வரிகள் விதிக்கப்பட்டாலும், விதிக்கப்படாவிட்டாலும், எங்கள் பதில்களைத் தனிப்பயனாக்க நாங்கள் விரும்புகிறோம். இந்த வரிகள் கனடா மீது சுமத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் முதல் கடமை” என்று மெக்கின்னன் கூறினார்.



