Tag: இலங்கை

  • தற்போதைய களச் சூழலில் தமிழரசுக் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்-ஸ்ரீதரன்  வேண்டுகோள்

    தற்போதைய களச் சூழலில் தமிழரசுக் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்-ஸ்ரீதரன் வேண்டுகோள்

    தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசு கட்சியினுடைய வெற்றிக்காக  உழைக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.  

    கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான அறிவகத்தில் இன்று சனிக்கிழமை (12) விஜயதசமி விழாவும் மாவட்டத்தின் இலங்கை தமிழரசு கட்சியினுடைய வட்டார உறுப்பினர்களுக்குமான  கலந்துரையாடல் நடைபெற்றது.     

    இதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.  

    அவர் மேலும் கூறுகையில்,  

    நாங்கள் ஒரு பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள். தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எங்களது முழு செயற்பாடுகளையும் முன்னிறுத்தியிருந்தோம்.  

    குறிப்பாக, தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற இனப்படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழ் மக்களுக்கான வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வு… இந்த கோரிக்கைகளை முன்வைத்த பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள் என்பது உண்மையாகும்.  

    அதற்காக பாவிக்கப்பட்ட சங்கு சின்னத்தை வேறு சிலர் கையில் எடுத்திருப்பது என்பது முரண்பாடான ஒரு விடயமாகும். அதனை அவர்கள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என்பது எனது கருத்தாகும்.   

    குறிப்பாக, தமிழரது ஒற்றுமை தேசத் திரட்சி. தமிழர்களை ஒன்றுபடுத்துதல் என்ற காரியத்துக்காக ஆற்றப்பட்ட அந்த விடயத்தில் தமது சின்னமாக அதனை கையில் எடுத்திருப்பது ஒரு முரணான விடயம்.    

    ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெறுகின்றன. பல்வேறு சின்னங்களுக்காக மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்றும் அந்த அடிப்படையிலே நாங்களும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு ஆதரவுகளை வழங்கி இருக்கின்றோம். வேட்பாளர்கள் நியமனங்களில் திருப்தி இருக்கிறதா, இல்லையா என்பதற்கு அப்பால் இப்போதைய காலச் சூழலில் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்கவேண்டும். அதுவே எனது  நிலைப்பாடு என்றார். 

    இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் முதலானோர் கலந்துகொண்டிருந்தனர். 

  • ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கிறது – டக்ளஸ்

    ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கிறது – டக்ளஸ்

    கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கி வருகின்றேன். அதனால்தான் எனது அனுபவமும் தூர நோக்குள்ள சிந்தனையும் இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என  ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  

    ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள், பிரதேச பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

    இது தொடர்பில் மேலும் கூறுகையில்,       

    ஒருவருக்கு நீந்த கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம். அந்த சிறப்பான அனுபவம் எம்மிடம் இருக்கின்றது.  தற்போது மாற்றம் என்ற கருப்பொருளை மையப்படுத்தியே அநேகமானோர் பரப்புரைகள் செய்கின்றனர்.  

    குறிப்பாக மக்கள் விரும்பும் மாற்றம் என்பது அரசியல் மாற்றமாகவே இருக்கின்றது. அந்த மாற்றம் தற்போது மத்தியில் ஏற்பட்டுள்ளது.  அந்த வகையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் அந்த மாற்றம் வரவுள்ளதாக கணிக்கப்படுகின்றது.  இதேவேளை எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது. 

    அந்த அனுபவத்தினூடாகத்தான் இம்முறை  மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியின் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தும் என நம்புகின்றேன்.  அத்துடன் ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது.  அதனால்தான் மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கு நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலமே அடிப்படையானது என வலியுறுத்தி வருகின்றேன் என்றார்.  

    மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரைகள் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அதற்கான கடின உழைப்பு மிக அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

  • கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் மேலும் பறிபோகும் அபாயம்!

    கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் மேலும் பறிபோகும் அபாயம்!

    ஒவ்வெரு அரசியல் கட்சிகளும் தமது அரசியல் என்ற தொனியில் சென்று கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் தலைவர்களும் அவ்வாறே இருக்கின் றார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இதய சுத்தியுடன் ஒன்றிணையா விட் டால் மிக பாரதூரமான விளைவுகளை தமிழ் அரசியல் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து கடந்த 30 செப் 2024 திங்கள்கிழமை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களு க்கு கருத்து தெரிவித்தார்.


    அவர் மேலும் கூறுகையில், திரு கோணமலை, அம்பாறை மாவட்ட ங்களில் தமிழர்களின் வாக்குகள் சித றும் நிலை உருவானால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் விடும். சென்ற பாராளுமன்ற தேர்தல் நாம் இதைப் பார்த்தோம். இப்போது ஒவ்வொரு அரசியல் கட்சி களும் தமது அரசியல் என்ற தொனி யில் சென்று கொண்டு இருக்கின் றார்கள். அரசியல் தலைவர்களும் அவ் வாறே இருக்கின்றார். தமிழ் மக்க ளிடையே பொதுவாக அவர்களால் பேசப்படும் கருத்து நாம் எல்லாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பது. இதனை தமிழ் தேசிய கட்சி கள் வெளிப்படை தன்மையுடன் கூறுவதில்லை.

    கடந்த ஜனாதிபதி தேர்தலில் பல கட்சிகள் ஒன்றினைந்து கேட்ட வேட்பாளரை விட தனித்துவ மாக போட்டியிட்ட அனுரகுமார அவர் களுக்கு சிங்கள மக்கள் அதிகமான வாக்குகளை கொடுத்திருந்தார்கள். இன்று எம்முள் உள்ள கேள்வி நாங்கள் ஒன்றினைய வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு இருக்கும் நிலையில் போட்டியிடுபவர்கள் யார்?. மக்கள் மத்தியில் இருக்கும் கேள்வி என்ன வென்றால் அதே நபர்கள் தொடர்ந்து இருப்பது தானா.

    இன்று ஊடகங் களில் வெளியாகி கொண்டிருக்கும் ஊழல் சம்மந்தமான விடயங்கள், சாராய பேர்மிட் வழங்கப்பட்டதாகவும், வாகன பேர்மிட் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. உண்மையில் இதற்கு உரிய நபர்கள் வெளிப்படைத் தன்மையுடன் பொறுப்பு கூற வேண் டும். சிங்கள தேசம் தனது நிலைப் பாட்டில் தெளிவாக இருக்கின்றது. நான் கூட சிங்கள தேசிய அரசியல் ஊடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்க லாம் என்று நம்பியவன். ஆனால் 10 ஆண்டுகளாக நான் கட்ட அனுபவம் என்னவென்றால் சிங்கள தேசம் தனது நிலைப்பாட்டில் தெளி வாக இருக்கின்றது.
    ஈழத்தில் உள்ள அனைத்து இடங்களி லும் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக வாழ தயாராக இருக்க வேண்டும் என்பதே சிங்கள தேசியத்தின் நிலைப் பாடாகும்.


    இன்று காணி சீர்திருத்தம் என்ற ஒரு விடயத்தை எடுத்துக் கொள்ள வேண் டும். வடக்கு கிழக்கில் காணி சீர்திரு த்தம் எனும் பெயரில் காணிகள் அப கரிக்கப்பட்டு வந்த வரலாறு எமக்கு தெரியும் அதை தொடர மாட்டோம் என்று அனுரகுமார திசாநாயக்க அவர் களின் கட்சி தெரிவித்தாலும் கூட அவர்கள் காணி சீர்திருத்த திட்ட த்தை வைத்திருக்கின்றார்கள் என்ற உண்மையை நாங்கள் உணர வேண் டும். என மேலும் தெரிவித்தார்.