January 15, 2026

ரணில் அரசிடம் “சாரயச்சாலை” அனுமதிப் பத்திரம் வாங்கிய முன்னாள் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கு மாகணங்கள் எங்கும் மதுபானச்சாலைகளும் இளைஞர்கள் மத்தியில் போதைப் பாவனைகளும் சிங்கள அரசாங்கத்தால் திட்டமிட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்று இதுவரை இருந்த குற்றச்சாட்டாகும். ஆனால் தற்போது புதிய அரசு பொறுப்பேற்றதன் பின்னர் இத்தகைய செயற்பாடுகளில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாகத் தெரிய வந்து கொண்டிருக்கின்றது. தன்னை ஒரு தூய்மைவாதி என்று பீற்றித் திரியும் அயோக்கியத்தனம் நிறைந்த முன்னாள் அநீதியரசர் விக்கினேஸ்வரன் தான் செய்தது ஒரு சமூகக் கேடு என்பதை ஏற்றுக் கொள்ளாது தெரிவிக்கும் கருத்தினைப் பாருங்கள்.


மதுபான சாலை அனுமதியினை பெறு வதற்காக சிபாரிசு கடிதம் ஒன்றினையே வழங்கினேன் அதனை வைத்து ஏதோ பெரிய ©தம் இருப்பது போன்று காட்டமுயல்கின்றனர். அவை என்னை எதுவும் செய்யாது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த 30 செப் 2024 திங்கட் கிழமை ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த போதே அவ்வாறு தெரி வித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் பெண்ணொருவர் என்னிடம் வந்து மதுபான சாலை ஒன்றின் அனுமதிக் காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிபாரிசு கடிதம் தேவை என கேட்டார். அவரின் பெற்றோர் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அதனால் சிபாரிசு கடிதம் வழங்கினேன். அந்த கடிதம் கொடுத்தது உண்மை. மதுபான சாலை அனுமதி பத்திரங் களை எடுத்து அதனை கோடி ரூபாய் கணக்கில் விற்பதாக கூறுகின்றார்கள். அது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அரசியல் ரீதியாக என்னை அடிக்க வேண்டும் என்பதற்காக சிபாரிசு கடிதம் கையளித்ததை வைத்து, ஏதோ பெரிய ©தம் இருப்பது போன்று காட்ட முனைகிறார்கள். அதெல்லாம் என்னை எதுவும் செய்யாது என மேலும் தெரிவித்தார்.


இது இவ்வாறிருக்க இதனிடையே கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் புதிய மதுபானச்சாலைக்கான உரிமம் ஒன்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமான விக்னேஸ் வரன் ஊடாகப் பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சி.வி.விக்னேஸ் வரன் கடந்த பெப்ரவரி 19 அன்று எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையிலேயே மதுபான சாலைக் கான அனுமதி அப்போதைய ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. தனுசா நடராசா என்னும் பெயரில் மதுபானசாலைக்கான அனுமதியை சி.வி.விக்னேஸ்வரன் பரிந்துரைத்துள் ளார். தனுசா முதலில் ஓர் இரணுவ த்தில் பணியாற்றிய இராணுவ சிப் பாயை திருமணம் செய்திருந்த நிலையில் பின்னார் இராணுவ சிப்பாயை விவாகரத்து செய்துள்ளார்.

தற்பொழுது சமத்துவ கட்சியின் தலை வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினருமாகிய முருகேசு சந்திரகுமாருடன் வாழ்ந்து வருகின்றார். அதேவேளை தனுசாவிற்கு சொந்தமாக சுன்னாகம் இணுவில் மற்றும் கனகபுரம் பகுதிகளில் மதுபானச்சாலைகள் உள்ளதாக கூறப்படுகின்றது. தனுசாவின் தந்தையார் சுன்னாகத்தில் இருந்த பிரேமானந்தாவின் ஆச்சிரமத்தில் அவரது பக்தனாக இருந்தவர். இந்தியாவின் பாலியன் குற்றவாளியாக நீதிமன்றத்தால் கண்டறிப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேமானந்தாவின் இந்த அநீதியரசரும் சீடர் என்பதும் முதலமைச்சராக பதவியேற்ற வுடன் இந்தியப் பிரதமர் மோடிக்கு பிரேமானந்தாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கும்படி கடிதம் எழுதிய வரலாற் றுப் பெருமை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வடகிழக்கை மையப்படுத்தி நூற்றுக் கணக்கில் மதுபான சாலைகளை தெற்கு அனுமதித்துள்ளது. இந்நிலை யில் மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமை யில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான சாலையை உடனடியாக இட மாற்றக் கோரி நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மதுபானசாலைக்கு முன் பாக கடந்த 30 செப் 2024 திங்கட் கிழமை சவப்பெட்டியுடன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் மாவட்ட செயலரிடம் கையளிக்கப்பட்டதுடன் அவரது வாக்குறுதிக்கமைய மக்கள் ஆர்ப்பாட் டத்தை கை விட்டுள்ளனர்.

மேலதிக செய்திகள்