January 15, 2026

புதிய இராஜதந்திரத்தின் தொடக்கம்: இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் பிரதமர் ஹரினி அமரசூரியாவின் டெல்லி விஜயம் (அக்டோபர் 2025)

Sri Lankan and Indian Prime Ministers

அறிமுகமும் விஜயத்தின் முக்கியத்துவமும்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று மற்றும் பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கையின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியா அவர்கள் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இந்தியாவுக்கு மேற்கொண்டார். பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அமரசூரியா இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.

“இந்திய-இலங்கை உறவுகளை மேலும் அதிகரிப்பதும் வலுப்படுத்துவதுமே” தனது விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என டெல்லி சென்றடைந்த போது அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இந்த விஜயம், புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இரு நாடுகளுக்குமிடையே அதிவேகமாக நடைபெற்று வரும் உயர்மட்ட இராஜதந்திரப் பரிமாற்றங்களின் தொடர்ச்சியாக அமைகிறது. ஏற்கனவே, ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள் 2024 டிசம்பர் 15 முதல் 17 வரை இந்தியாவுக்குத் தனது முதல் வெளிநாட்டு அரச விஜயத்தை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2025 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தார். அநுர திசாநாயக்க ஜனாதிபதியாக பதியேற்றதன் பின்னர், அவர் முதன் முதலாக வரவேற்ற வெளிநாட்டுத் தலைவர் இந்திய பிலதமர் நரேந்திரமோடியாகும்.

இந்தத் தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புகள், இந்தியாவுடனான உறவில் இலங்கை எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது, அத்துடன் இந்த உறவின் “விசேட மற்றும் தனித்துவமான தன்மை” மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘அயல்நாட்டவர் முதன்மை'(Neighbourhood First) கொள்கை மற்றும் இந்தியாவின் ஆழ் சமுத்திர பாதுகாப்பு தொடர்பான தூரநோக்கு கொள்னை (Maritime Strategy) ஆகியவற்றின் கீழ் இலங்கையின் முக்கியத்துவத்தை இந்த விஜயம் வலியுறுத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது.

புதிய ஜனாதிபதி தலைமையிலான NPP கூட்டணி பாரம்பரியமாக இடதுசாரி சித்தாந்தத்தையும், இந்தியாவுக்கு எதிரான வரலாற்றுப் பின்னணியையும் கொண்டிருந்தபோதிலும் தற்போதைய இராஜதந்திர நகர்வுகள் அதன் அடிப்படை சித்தாந்த போக்கில் மாறுபாட்டைக் காட்டுகின்றன.

2022ம் ஆண்டு இலங்கையில் உருவான பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா வழங்கிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அவசர உதவிகள் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. எனவே, புதிய அரசாங்கம் அதன் அரசியல் சித்தாந்த நிலைகளைக் கடந்து, நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் ஆதரவைத் தொடர்ந்து நாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது, புவிசார் அரசியல் நிலைப்பாட்டில் இந்திய உறவுகளை இலங்கைக்கு ஒரு அத்தியாவசியமான ‘பாதுகாப்புக் காப்பீடாக’ மாற்றியுள்ளது.

பிரதான சந்திப்புகளும் மையக்கருத்தும்

பிரதமர் மோடியுடனான சந்திப்பு மற்றும் கவனம் செலுத்திய துறைகள்

இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியா அவர்கள் அக்டோபர் 17, 2025 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான சூழலில் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. பிரதமர் மோடி, அமரசூரியாவை சிறப்பாக வரவேற்று, அவரது விஜயம் இருதரப்பு உறவுகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


இரு தலைவர்களும் கல்வி, தொழில்நுட்பம், பெண்களின் அதிகாரம், புதிய கண்டுபிடிப்புகள் (Innovation), அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் தமிழக, இந்திய மீனவர் நலன் உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரு நாடுகளின் பரஸ்பர வளர்ச்சிப் பயணத்தில் இந்தியா தொடர்ந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.


முன்னதாக, அக்டோபர் 16 அன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைப் பிரதமரைச் சந்தித்து, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை வலுப்படுத்துவது குறித்து கல்ந்துரையாடினார்.

நெருக்கடி நிர்வாகத்திலிருந்து கட்டமைப்பை நோக்கிய நகர்வு

2022-2024 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான உயிர்நாடியாகச் இந்தியாவின் ஆதரவு விளங்கியது, கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கியது. ஆனால் அமரசூரியாவின் இந்த விஜயம், உடனடி நிதி சார்ந்த உதவிகள் அல்லது கடன் மறுசீரமைப்பு போன்றவற்றிலிருந்து விலகி, நீண்டகால அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களில் அதிக கவனம் செலுத்தியது. உதாரணமாக, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ஆளுமை போன்ற துறைகளில் கவனம் குவிந்திருந்தது.

இந்த மாற்றம், இலங்கை அரசாங்கம் உடனடி நிதி நெருக்கடி அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான உள் கட்டமைப்புச் சீர்திருத்தங்களில் தீவிர கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. இந்தப் புதிய அணுகுமுறை, இரு நாடுகளுக்குமிடையேயான உறவை பலமான் கட்டமைப்பு ரீதியிலான அடித்தளத்தில் நிலைநிறுத்த உதவும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.

NPP அரசாங்கம், கல்விச் சீர்திருத்தங்கள், ஊழல் ஒழிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை, அமரசூரிய டெல்லி கல்வி நிறுவனங்களில் ஆற்றிய உரைகள் உறுதிப்படுத்துகின்றன.

தேதிமுக்கிய நிகழ்வுவிவாதிக்கப்பட்ட அல்லது நிகழ்த்தப்பட்டஅம்சம்
அக்டோபர்16இந்து கல்லூரிவிஜயம் (Alma Mater)கலாச்சாரப் பரிமாற்றம், இந்தியாவின்பன்முகத்தன்மைக்குப் பாராட்டு, வகுப்பு27ஐ பார்வையிடல்.
அக்டோபர்16-17வெளியுறவுஅமைச்சர் & வர்த்தக நிகழ்வுகல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஆதரவைவலுப்படுத்துதல், வணிகத் தொடர்புகளைமேம்படுத்துதல்.
அக்டோபர்17பிரதமர்மோடியுடன்சந்திப்புகல்வி, தொழில்நுட்பம், பெண்களின்அதிகாரம், அபிவிருத்தி ஒத்துழைப்புமற்றும் மீனவர் நலன் குறித்து விவாதம்.
அக்டோபர்17NDTV உலகஉச்சி மாநாடு1998 FTA ஐ மேம்படுத்துவதன் அவசியம், இந்தியாவின் டிஜிட்டல் ஆளுகைமுன்மாதிரி குறித்த பாராட்டு.
விஜயம்முழுவதும்கல்விநிறுவனங்கள்விஜயம்ஐஐடி டெல்லி மற்றும் டெல்லி அரசுப்பள்ளி விஜயம்; கல்விச் சீர்திருத்தங்கள்மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு ஆய்வு.

கல்வி, கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவுப் பரிமாணங்கள்

பிரதமர் அமரசூரியவின் விஜயத்தின் மிகவும் தனித்துவமான அம்சம், அவரது தனிப்பட்ட கல்விப் பின்னணி மூலம் இருதரப்பு உறவுகளுக்குக் கிடைத்த உத்வேகமாகும்.

தாய்க் கல்வி நிறுவனத்திற்கு மீள் விஜயம்

பிரதமர் அமரசூரியா, டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார். 1991 முதல் 1994 வரை இந்திய அரசின் புலமைப்பரிசில் உதவித்தொகையின் கீழ் அவர் அங்கு சமூகவியல் படித்தார். ஒரு நாட்டின் தலைவராகத் தனது தாய்க் கல்வி நிறுவனத்திற்கு அவர் விஜயம் செய்தது “குறிப்பிடத்தக்க ஒரு வீடு திரும்புதலாக” கல்லூரி நிர்வாகத்தால் பெருமையுடன் கொண்டாடப்பட்டது. அங்கு அவர் தனது பழைய வகுப்பு எண் 27-ஐப் பார்வையிட்டு, தான் அங்கு சாளரத்தின் அருகே அமர்ந்து விவாதங்களில் ஈடுபட்டதை பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரையில் நினைவுகூர்ந்தார்.

அவர் டெல்லியில் பல்கலைக்கழகத்திற்கு சென்ற தனது ஆரம்ப கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது, “இந்த நகரம் என்னை ஏற்றுக்கொண்டது, என் வீடு போன்ற உணர்வை அளித்தது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார், மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக பண்பை பாராட்டினார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயமானது ஒரு நாட்டின் உயர்மட்டத் தலைவரின் தனிப்பட்ட கல்வித் தொடர்பு, இரு நாடுகளுக்குமிடையேயான உறவைப் பாரம்பரிய அரசியல் மட்டத்திலிருந்து மக்கள்-மக்கள் உறவு மட்டத்திற்கு உயர்த்தும் இராஜதந்திர வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

கல்வி மற்றும் டிஜிட்டல் ஆளுகை ஒத்துழைப்பு

கல்வி அமைச்சராகவும் இருக்கும் அமரசூரியா, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் கூட்டுறவுகளை ஆராயும் நோக்குடன் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி டெல்லி), National Institution for Transforming India (தேசிய இந்திய உருமாற்ற நிறுவனம்) மற்றும் டெல்லி அரசுப் பள்ளி (சர்வோதயா கூட்டுறவு வித்யாலயா) ஆகியவற்றை பார்வையிட்டார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பில், கல்வி உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிறுவன ரீதியான கூட்டுறவுகளை ஆழப்படுத்துவது குறித்தும் அவர் விவாதித்தார்.

அமரசூரியா, டிஜிட்டல்; துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை வெளிப்படையாகப் பாராட்டினார். ” இந்தியாவின் டிஜிட்டல்மயமாக்கல் ஆளுகைச் செயல்முறைகளை, வெளிப்படையானதாகவும், அணுகக்கூடியதாகவும், பொறுப்புணர்வு மிக்கதாகவும் விளங்குகின்றது. இது மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டிய ஒரு சிறந்த முன்மாதிரி” என்று அவர் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் (Unique Digital ID) திட்டத்தை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று உறுதியளித்தது.

பொருளாதாரப் பிணைப்புகளின் முன்னேற்றம்

வணிகத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்குடன் அமரசூரியா ஒரு வணிக நிகழ்விலும் பங்கேற்றார். Nனுவுஏ உலக உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், 1998 இல் கையெழுத்திடப்பட்ட இந்தியா-இலங்கை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (குவுயு) “மேம்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், சுற்றுலா மூலமாகவும் உள்ள நிலையில், இந்தப் பிணைப்புகளை ஆழப்படுத்துவதன் மூலம் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் NPP அரசாங்கம் அதிக ஆர்வத்துடன் உள்ளது.

நீடித்திருக்கும் இருதரப்பு சவால்கள்: மீனவர் விவகாரமும் தமிழ் அரசியல் தீர்வும்

இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளின் நீண்டகால மற்றும் மிகவும் உணர்வுபூர்வமான சவால்களும் விவாதிக்கப்பட்டன.

மீனவர் நலன் மற்றும் கச்சத்தீவு விவகாரம்

பிரதமர்கள் மோடி மற்றும் அமரசூரியாவின் பேச்சுவார்த்தைகளில் “மீனவர்களின் நலன்” ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்தது.
விஜயத்திற்கு முன்னர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், அத்துடன் இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்ட 1,400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்தப் பிரச்சினை, கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும்போது ஏற்படும் கைதுகள் மற்றும் படகுகள் பறிமுதல் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே நீண்டகாலமாக பதற்றத்தை ஏற்படுததிக் கொண்டிருக்கின்றது.
சந்திப்புக்குப் பிறகு, இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியா மீனவர் பிரச்சினையை ஒரு “உணர்ச்சிபூர்வமான பிரச்சனை” என்று குறிப்பிட்டார். மேலும், “நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் அவசியம் இலங்கைக்கு உள்ளது” என்றும், நடைமுறைத் தீர்வைக் கண்டறிய இரு நாடுகளும் தொடர்ந்து பேசுவது முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கைப் பிரதமர், இந்தப் பிரச்சினையை வெறும் இந்திய மீனவர் மீதான சட்ட நடவடிக்கையாகப் பார்க்காமல், ‘இருதரப்பு மீனவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு’ என்ற சமநிலையான பார்வையை முன்வைத்ததன் மூலம், உள்நாட்டு மீனவர் சமூகத்தின் மீதான தனது கடமையையும் வலியுறுத்தி, இராஜதந்திர ரீதியில் இந்தப் பிரச்சினையை அணுக முயன்றார்.

தமிழ் அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு

இலங்கையின் உள்நாட்டு அரசியலில் முக்கியமான அதிகாரப் பகிர்வு (னுநஎழடரவழைn) மற்றும் 13வது திருத்தம் குறித்த விவாதங்கள் இந்த விஜயத்தின்போது அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளில் வெளிப்படையாக இடம்பெறவில்லை. எனினும், மோடியும் அமரசூரியாவும் மீனவர் நலன் குறித்து பேசியது, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரப்பில் ஒரு அறிக்கையாக வெளியிடப்பட்டது.

இந்தியா, பாரம்பரியமாக இலங்கைத் தமிழர்களின் “சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதி” குறித்து வலியுறுத்தி வந்துள்ளது. மோடியின் முந்தைய விஜயங்களின்போதும் இது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும், தமிழ் அரசியல் தீர்வு மற்றும் நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து இந்தியா தலையிட வேண்டும் என்று தமிழ் அரசியல் சமூகங்கள் தொடர்ந்தும் நம்புகின்றன.

இலங்கையின் முன்னணி தமிழ்த் தினசரியான வீரகேசரி, மோடியின் ஏப்ரல் 2025 விஜயத்தின்போது வெளியிட்ட தலையங்கத்தில், “புவிசார் அரசியல் யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா தமிழ்ப் பிரச்சினையைத் தொடுவதற்குத் தயக்கம் காட்டுவதாகவும், இலங்கையுடன் நட்புறவைப் பேண வேண்டிய சூழலில் உள்ளது போலத் தெரிகிறது” என்று குறிப்பிட்டது.

தற்போதைய NPP அரசாங்கம், சீனாவுடனான உறவை சமநிலையில் பேணுவதற்கும், பொருளாதார சீர்திருத்தங்களை ஸ்திரப்படுத்துவதற்கும் இந்தியாவிடமிருந்து முழுமையான ஆதரவைப் பெற விரும்புகிறது. இத்தகைய முக்கியமான கட்டத்தில், அதிகாரப் பகிர்வு குறித்த விவாதம் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் பெரும் பிளவை ஏற்படுத்தலாம். எனவே, இந்தியா, உடனடி பொருளாதார மற்றும் மூலோபாயப் பிணைப்புகளை வலுப்படுத்த தமிழ்ப் பிரச்சினையில் ‘மூலோபாய மௌனம்’ சாதித்துள்ளது என்ற கருத்து நிலவுகிறது.

இந்த புவிசார் அரசியல் முன்னுரிமை, தமிழ் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை இந்தியா கையாளும் விதத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற விமர்சனத்திற்கு வழிவகுக்கிறது.

புவிசார் அரசியல் சமநிலை மற்றும் சீனக் காரணி

பிரதமர் ஹரினி அமரசூரியாவின் இந்திய விஜயம், புதிய இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையான “நடுநிலையான” வெளியுறவுக் கொள்கையை (neutral foreign policy) உறுதிப்படுத்தயுள்ளது.
அமரசூரியா டெல்லிக்கு வருவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், அக்டோபர் 14, 2025 அன்று அவர் பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கைச் சந்தித்தார். அங்கு அவர் ‘பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின்’ (BRI) கீழ் வளர்ச்சிப் பங்காண்மைகளை முன்னெடுப்பது குறித்து விவாதித்தார்.

இரண்டு ஆசிய வல்லரசுகளையும் உடனடியாகச் சந்திப்பது, இந்த இரு நாடுகளுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவதற்கான NPP அரசாங்கத்தின் தெளிவான முயற்சி என்பதைக் காட்டுகிறது.
இருப்பினும், இந்தியாவுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கையாக, அமரசூரிய டெல்லியில் உரையாற்றியபோது, “இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் நிலத்தைப் பயன்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது” என்று உறுதியளித்தார். இந்த உறுதிப்பாடு, சீனக் கடற்படைக் கப்பல்களின் வருகை குறித்த இந்தியாவின் நீண்டகால பாதுகாப்பு கவலைகளுக்கு ஒரு முன் கூட்டிய இராஜதந்திர பதிலாகப் பார்க்கப்படுகிறது.

2024-2025 காலகட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் தொடர்ச்சியான உயர்மட்டப் பரிமாற்றங்களை மேற்கொண்டது, இந்தியாவின் ‘அயல்நாட்டவர் முதன்மை’ கொள்கை வெற்றியடைவதையும், நிதி நெருக்கடிக்கு இந்தியா வழங்கிய உடனடி உதவி, கொழும்புடனான அதன் உறவை ஆழப்படுத்தியுள்ளது என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது.

2024-2025ல் இந்திய-இலங்கை உயர்மட்டப் பரிமாற்றங்களின் முக்கியத்துவம்

நாள் (2024-2025)தலைவர்விஜயத்தின் முக்கியத்துவம்உறவின் நோக்கம்
டிசம்பர் 15-17, 2024ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கபுதிய ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டு விஜயம். இந்தியாவின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தல்.புவிசார் அரசியல் உறுதிப்பாடு மற்றும் பொருளாதாரப் பிணைப்பு.
ஏப்ரல் 4-6, 2025பிரதமர் நரேந்திர மோடிதிசாநாயக்கவால் வரவேற்கப்பட்ட முதல் வெளிநாட்டுத் தலைவர். 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து.பாதுகாப்பு, எரிசக்தி (சம்பூர் திட்டம்), டிஜிட்டல் மாற்றம்.
அக்டோபர் 16-18, 2025பிரதமர் ஹரினி அமரசூரியபுதிய பிரதமரின் முதல் உத்தியோகபூர்வ விஜயம். கல்வி அமைச்சர் என்ற முறையில் கவனம்.திறன் மேம்பாடு, கல்விச் சீர்திருத்தம், FTA மேம்படுத்துதல், மென்சக்தி இராஜதந்திரம்.

பிரதமர் ஹரிணியின் இந்திய விஜயத்தின் முடிவும் எதிர்காலத்திற்கான கண்ணோட்டமும்

பிரதமர் ஹரினி அமரசூரியாவின் இந்திய விஜயம், இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் புதிய உத்வேகத்தை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புவிசார் அரசியல் அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு சவால்களுக்கு மத்தியில் உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தேவையான துறைகளில் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விஜயம், அரசியல் பரிமாற்றங்களை விட, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவுப் பரிமாற்றத்தில் கவனம் செலுத்தியதன் மூலம், நீண்டகால, கட்டமைப்பு ரீதியிலான பங்காண்மைக்கான தளத்தை அமைத்துள்ளது. ஒரு முன்னாள் இந்திய மாணவி ஒரு நாட்டின் தலைவராக டெல்லிக்குத் திரும்புவது, இந்தியாவின் மென்சக்தியின் மூலம் இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்த உதவியது.

இருப்பினும், மீனவர் விவகாரம் இருதரப்பு உறவில் மிகவும் உணர்வுபூர்வமான சவாலாக நீடிக்கிறது. இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் ஒரு நடைமுறைத் தீர்வைக் கண்டறியத் தொடர்ச்சியான உயர்மட்ட மற்றும் தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் அவசியமாகின்றன. தமிழகத்தின் அரசியல் அழுத்தங்கள் மத்திய அரசாங்கத்தை இந்தப் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தொடர்ந்து வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் அரசியல் தீர்வு மற்றும் 13வது திருத்தம் குறித்த மூலோபாய மௌனம், NPP அரசாங்கத்துடன் உடனடிப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இலங்கையின் தமிழ்ச் சமூகத்தின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது மற்றும் அரசியல் தீர்வு காணப்படுவது குறித்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், இந்தப் புதிய அரசாங்கத்தின் கீழ், இந்திய-இலங்கை உறவு பொருளாதார மீட்பு மற்றும் மூலோபாயப் பிணைப்பின் ஊடாக அதிக ஆழத்தையும் ஸ்திரத்தன்மையையும் அடைந்துள்ளது.

கட்டுரைகள்…