January 15, 2026

அநுரவைக் கையாளும் சீனா

ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் கீ சென்ஹொங் ஊடகவிய லாளர்கள் சிலரைச் சந்தித்திருந்தார். தாய்வானில் இருந்து சீனா தனியாகப் பிரிந்து செயற்படத் தொடங்கிய 75 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு அந்த ஊடகச் சந்திப்பு இடம்பெற்றது.


ஒக்டோபர் முதலாம் திகதி 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும், சீனா, கடந்து வந்த பாதைகள், தற்போது அதன் நிலை, பொருளாதார பலம், எதிர்காலத்தில் அதன் முக்கியத் துவம் என்பனவற்றை விளக்கும் வகையில் சீன தூதுவர் உரையாடி யிருந்தார். அதன் போது அவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் இலங்கைக்கும் சீனாவுக் கும் மிக மிக முக்கியமானவை. புதிய திருப்புமுனையான ஐந்து ஆண்டு பயணத்தில் இந்த இரண்டு நாடுகளும் நுழையப் போகின்றன என்று குறிப் பிட்டிருந்தார்.

அத்துடன் இலங்கை யில் ஜனாதிபதி தேர்தல் நடக்கப் போவதையும் அவர் சுட்டிக் காட்டி இருந்தார். அதற்கு அப்பால் இலங்கை அரசியலை அவர் தொட்டுக் கொள்ள வில்லை. ஆனால் அவர் இரண்டு நாட்டு அரசியலையும் சேர்த்து பேசி யது திருப்புமுனை என்று குறிப்பிட் டது எல்லாமே ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண் டது தான்.

75ஆவது ஆண்டை கொண்டாடும் சீனா, இன்னும் ஐந்து ஆண்டுகளில் 80 ஆண்டை கொண்டாடப் போகி றது. இந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பொருளாதார வளர்ச்சியிலும் சரி, படை பலத்திலும் சரி தன்னை அசைக்க முடியாத சக்தியாக மாற்றிக் கொள்வ தற்கு திட்டமிட்டிருக்கிறது.
2029 ஆம் ஆண்டு 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் போது குறிப்பிட்ட இலக்குகளை அடைய திட்டமிட்டிருக்கிறது. இலங்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகள் திருப்பு முனையாக இருக்கும் என்று சீனத் தூதுவர் குறிப்பிட்டதற்கு காரணம் ஆட்சி மாற்றம் தான். இலங்கையில் இந்த முறை ஆட்சி மாற்றம் நிகழும், அநுரகுமார திசாநாயக்க பதவிக்கு வருவார் என்பதை சீனா முன்னரே அறிந்திருந்தது.


இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புலனாய்வுப் பிரிவுகள் இதனை ஓரளவுக்கு கணித்திருந்தன. இந்த ஆட்சி மாற்றம் குறித்த நம்பிக்கையான தகவல்கள் கிடைத் திருந்த போதும், சீனா அது பற்றி வாய் திறக்கவில்லை. அவ்வாறு செய் தால், குட்டையை குழப்பி விடும் ஆட்சி மாற்ற வாய்ப்புகளைக் கெடு த்து விடுமென சீனா கருதியிருக்க லாம்.

தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக சீனத் தூதுவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் திருப்புமுனையாக இரு க்கும் எனச் சூசகமாக குறிப்பிட்டதை பலர் கவனத்தில் எடுக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் முடிந்து சில நாட்களே ஆகியிருந்த நிலையில், கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி சீனாவின் 75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு, உலகம் முழு வதிலும் உள்ள சீன தூதரகங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இலங்கையில் உள்ள சீன தூதரகமும் ஷங்ரிலா விடுதியில் ஒரு வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் வெளிவிவகார அமை ச்சராக பதவியேற்ற விஜித ஹேரத் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் கலந்து கொண் டிருந்தார்கள்.


ஏற்கனவே நாட்டை விட்டு வெளி யேறிய கோட்டாபய ராஜபக்ஷ இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. ஆனால் _லை 29 ஆம் திகதி ஷங்ரிலா விடுதி யில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் நிறுவக தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு கோட்டாபய ராஜபக்ஷவும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் நாட்டில் இருந்திருந்தால் இந்த நிகழ் வில் பங்கேற்று இருப்பார். புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனத் தூதரகத்தின் நிகழ்வில் பங்கேற்க கூடிய நிலை இருக்கவில்லை. பதவி யேற்ற சில தினங்களே என்பதால் பல நிர்வாக வேலைகள் அவருக்கு இருந்தன.


அதே போல பதவியேற்ற கையுடன் சீன தூதரகத்தின் நிகழ்வில் பங்கேற்றால் அது விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்த விடயம் தான். ஏனென்றால் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட தும், இலங்கையின் முதலாவது மார்க்சிஸ்ட் ஜனாதிபதி என்றே சர்வ தேச ஊடகங்கள் அடையாளப்படுத்தின. இடதுசாரி பாரம்பரியத்தில் வளர்ந்த அவரது கட்சி, இப்போது முழுமை யான இடதுசாரி கொள்கையை பின் பற்றா விட்டாலும் சீனாவுக்கும் அதற்குமான தொடர்பு அதிகம்.

அநுரவை ஆட்சிக்கு கொண்டு வரு வதில், சீனா முக்கிய பங்கு வகித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன் அநுர குமாரவை சீனாவே இயக்கி வருவதாக வும் இந்த ஆட்சி மாற்றம் இந்தியா வுக்கு சாதகமானதாக இருக்காது, சவாலாக இருக்கும் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரு கின்றன.


கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி பிரான்சில் பிரபல பத்திரிகையான, லீமொன்டே (டநஅழயெனந) யில் அதன் புதுடெல்லி செய்தியாளரான சோபிலா ன்ட்ரின் (Sophie Landrin ) ஒரு கட்டுரையை வரைந்திருந்தார். இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இந்தியாவில் இரு ந்து விலகி இருப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது என்பது தான் அதன் தலைப்பு.


ஜனாதிபதி அநுர, தனது கட்சி முன்னோடிகளை விட பீஜிங்கிற்கு ஆதரவாக இருக்கலாம். இது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், கௌதம் அதானிக்கும் பின்னடைவாகும் என் றும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்திய ஊடகங்கள் பலவும் இலங்கை யில் அநுரகுமார திசநாயக்க பதவிக்கு வந்ததை ஆபத்தான ஒரு அறிகுறியாக சுட்டிக்காட்டி இருந்தன. அவை இந்தியாவின் நலன்களை மையப்படு த்தி கட்டுரைகளை வரைந்திருந்தன.


குறிப்பாக மாலைதீவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றம், இலங்கையில் இடம் பெற்றிருக்கின்ற ஆட்சி மாற்றம், பங்களாதேஷில் நிகழ்ந்திருக்கின்ற ஆட்சி மாற்றம், ஆகியவற்றுடன் நேபாளத்தில் மீண்டும் சர்மா ஒலி அரசாங்கம் பதவிக்கு வந்திருப்பது, எல்லாமே இந்தியாவுக்கு சாதகமற்றது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டி யிருக்கின்றன.


இந்தியா தனது அண்டை நாடுகளு டன் கொண்டிருக்கும் துலக்கமற்ற உறவுகளை வெளிப்படுத்தி, அதன் பூகோள அரசியல் கரிசனைகளை வெளிப்படுத்தும் வகையில், இந்திய ஊடகங்களின் செய்திகள் அமைந்திருக் கின்றன. இதனை சீனா விரும்ப வில்லை என தெரிகிறது. ஆனால் இராஜதந்திர ரீதியாக சீனா அதனை வெளிக்காட்டவில்லை. முன்னர் சீனா, இலங்கையில் உள்ள தனது தூதரக த்தையும் ஓநாய் வீரன் இராஜதந்திரத் திற்காக பயன்படுத்தியது. உடனுக்கு டன் விமர்சனங்களுக்கு பதிலடி கொடு த்துக் கொண்டிருந்தது.


அண்மைக் காலங்களில் இந்தியாவிடம் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் பெரிதாக விமர்சனங்களை முன்வைக்க வில்லை. ஆனால், சீனாவின் அதிகார பூர்வ நாளேடுகளில் ஒன்றான குளோபல் ரைம்ஸ் இலங்கை குறித்த இந்தியா வின் கரிசனைகளை கடுமையாக தாக்கி கட்டுரைகளை வரைந்து வரு கிறது. இந்தியாவுக்கும் இந்திய ஊடக ங்களுக்கும் கடுமையான போட்டியை அது கொடுத்துக் கொண்டிருக்கிறது.
சீன அரசின் 75 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய சீன தூதுவர் கீ சென்ஹொங், சீனாவும் இலங்கையும் திருப்புமுனையான ஒரு நட்பு முனையான ஒரு கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
இரண்டு நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்புகளையும் தொடர்ந்து பலப்படுத்திக் கொள்ளவும் அவர் விருப் பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதற்கு அப்பால், கடன் மறுசீரமை ப்புக்கு உதவத் தயாராக இருப்பதாக வும் அவர் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி அநுரவைச் சந்தித்து கூறி ரணில் விக்கிரமசிங்க கடன் மறு சீரமைப்புக்கு சீனா பெரியளவில் இண ங்கவில்லை. ஆனால் புதிய அரசாங்க த்திற்கு சீனா கடன் தள்ளுபடி அல்லது சலுகையை கொடுத்து இந்தியா, மற்றும் மேற்குலகத்துக்கு அதிர்ச்சி யைக் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
கடன் பொறி இராஜதந்திரம் தொடர் பாக இந்தியா மற்றும் மேற்குலகம் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் சீனாவை மிகவும் பாதித்திருக்கிறது. இலங்கையின் ஆட்சியில் இருந்த ராஜபக்ஷ வம்சம் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட தும் கூட இந்த பிரசாரத்தின் மூலம் தான். இதனை சீனாவினால் சகித்துக் கொள்ள முடியவில்லை.


கடன்பொறி இராஜதந்திரம் பற்றிய குற்றச் சாட்டுக்கள் ராஜபக்ஷவினரின் அரசியலில் சூனியத்தை ஏற்படுத்தியது போல, இலங்கையில் சீனாவின் இராஜ தந்திரம் மற்றும் அரசியலுக்கும் சூனியத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் சீனா கவனமாக இருந்தது. அதனால் தான் இலங்கையை மையப் படுத்திய போட்டியில் ஈடுபடுவதாக, காட்டிக் கொள்வதை தவிர்த்தது.

சீனா ராஜபக்ஷவினருக்கு மாற்றாக அநுரகுமாரவை வளர்த்தெடுக்கும் முயற்சிகளை மீண்டும் முன்னெடு த்தது. சீனாவிடம் வழங்கி வருகின்ற உதவிகள், நிதிகள் எல்லாமே தமக்கு சார்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். அதனை அடிப்படையாகக் கொண்டு தான். சீனாவின் எல்லா திட்டங்களும் அமைந்து இருக்கின்றன. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இலங்கையில், இந்திய- சீன முரண்பாடுகள் இன்னும் கூர்மையடையும் என்ற கருத்து பரவலாக காணப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க, பிராந்தியத்தில் இந்திய- சீன் அதிகாரப் போட்டிக்குள் இலங்கை ‘சாண்ட்விச் துண்டு’ போல சிக்கி கொள்ளாது என்று கூறியிருக்கிறார்.

அவர் அதனை கூறி இருந்தாலும் அத்தகைய சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்க்க நினைத்தாலும், அவ்வளவு இலகுவாக அதிலிருந்து விலக முடியாது. அவருக்குள் இருக் கும் சீன சார்பு தன்மையும், சீனாவின் செல்வாக்கும் அவரை சூகோள அரசி யல் போட்டிக்குள் நிச்சயம் ,ழுத்துச் செல்லும். அதிலிருந்து இலங்கையோ அல்லது இலங்கையின் ஆட்சியாளர் களோ விலகிக் கொள்ள முனைகிறார் கள் என்றால், இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் முடிவுக்கு வருகிறது என்றே அர்த்தம்.

கட்டுரைகள்…