இலங்கை

  • ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கிறது – டக்ளஸ்

    ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கிறது – டக்ளஸ்

    கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கி வருகின்றேன். அதனால்தான் எனது அனுபவமும் தூர நோக்குள்ள சிந்தனையும் இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என  ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  

    ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள், பிரதேச பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

    இது தொடர்பில் மேலும் கூறுகையில்,       

    ஒருவருக்கு நீந்த கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம். அந்த சிறப்பான அனுபவம் எம்மிடம் இருக்கின்றது.  தற்போது மாற்றம் என்ற கருப்பொருளை மையப்படுத்தியே அநேகமானோர் பரப்புரைகள் செய்கின்றனர்.  

    குறிப்பாக மக்கள் விரும்பும் மாற்றம் என்பது அரசியல் மாற்றமாகவே இருக்கின்றது. அந்த மாற்றம் தற்போது மத்தியில் ஏற்பட்டுள்ளது.  அந்த வகையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் அந்த மாற்றம் வரவுள்ளதாக கணிக்கப்படுகின்றது.  இதேவேளை எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது. 

    அந்த அனுபவத்தினூடாகத்தான் இம்முறை  மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியின் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தும் என நம்புகின்றேன்.  அத்துடன் ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது.  அதனால்தான் மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கு நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலமே அடிப்படையானது என வலியுறுத்தி வருகின்றேன் என்றார்.  

    மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரைகள் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அதற்கான கடின உழைப்பு மிக அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

  • கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் மேலும் பறிபோகும் அபாயம்!

    கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் மேலும் பறிபோகும் அபாயம்!

    ஒவ்வெரு அரசியல் கட்சிகளும் தமது அரசியல் என்ற தொனியில் சென்று கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் தலைவர்களும் அவ்வாறே இருக்கின் றார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இதய சுத்தியுடன் ஒன்றிணையா விட் டால் மிக பாரதூரமான விளைவுகளை தமிழ் அரசியல் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து கடந்த 30 செப் 2024 திங்கள்கிழமை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களு க்கு கருத்து தெரிவித்தார்.


    அவர் மேலும் கூறுகையில், திரு கோணமலை, அம்பாறை மாவட்ட ங்களில் தமிழர்களின் வாக்குகள் சித றும் நிலை உருவானால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் விடும். சென்ற பாராளுமன்ற தேர்தல் நாம் இதைப் பார்த்தோம். இப்போது ஒவ்வொரு அரசியல் கட்சி களும் தமது அரசியல் என்ற தொனி யில் சென்று கொண்டு இருக்கின் றார்கள். அரசியல் தலைவர்களும் அவ் வாறே இருக்கின்றார். தமிழ் மக்க ளிடையே பொதுவாக அவர்களால் பேசப்படும் கருத்து நாம் எல்லாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பது. இதனை தமிழ் தேசிய கட்சி கள் வெளிப்படை தன்மையுடன் கூறுவதில்லை.

    கடந்த ஜனாதிபதி தேர்தலில் பல கட்சிகள் ஒன்றினைந்து கேட்ட வேட்பாளரை விட தனித்துவ மாக போட்டியிட்ட அனுரகுமார அவர் களுக்கு சிங்கள மக்கள் அதிகமான வாக்குகளை கொடுத்திருந்தார்கள். இன்று எம்முள் உள்ள கேள்வி நாங்கள் ஒன்றினைய வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு இருக்கும் நிலையில் போட்டியிடுபவர்கள் யார்?. மக்கள் மத்தியில் இருக்கும் கேள்வி என்ன வென்றால் அதே நபர்கள் தொடர்ந்து இருப்பது தானா.

    இன்று ஊடகங் களில் வெளியாகி கொண்டிருக்கும் ஊழல் சம்மந்தமான விடயங்கள், சாராய பேர்மிட் வழங்கப்பட்டதாகவும், வாகன பேர்மிட் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. உண்மையில் இதற்கு உரிய நபர்கள் வெளிப்படைத் தன்மையுடன் பொறுப்பு கூற வேண் டும். சிங்கள தேசம் தனது நிலைப் பாட்டில் தெளிவாக இருக்கின்றது. நான் கூட சிங்கள தேசிய அரசியல் ஊடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்க லாம் என்று நம்பியவன். ஆனால் 10 ஆண்டுகளாக நான் கட்ட அனுபவம் என்னவென்றால் சிங்கள தேசம் தனது நிலைப்பாட்டில் தெளி வாக இருக்கின்றது.
    ஈழத்தில் உள்ள அனைத்து இடங்களி லும் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக வாழ தயாராக இருக்க வேண்டும் என்பதே சிங்கள தேசியத்தின் நிலைப் பாடாகும்.


    இன்று காணி சீர்திருத்தம் என்ற ஒரு விடயத்தை எடுத்துக் கொள்ள வேண் டும். வடக்கு கிழக்கில் காணி சீர்திரு த்தம் எனும் பெயரில் காணிகள் அப கரிக்கப்பட்டு வந்த வரலாறு எமக்கு தெரியும் அதை தொடர மாட்டோம் என்று அனுரகுமார திசாநாயக்க அவர் களின் கட்சி தெரிவித்தாலும் கூட அவர்கள் காணி சீர்திருத்த திட்ட த்தை வைத்திருக்கின்றார்கள் என்ற உண்மையை நாங்கள் உணர வேண் டும். என மேலும் தெரிவித்தார்.

  • வவுனியாவில் போராட்டம் நடத்தியவர்களை அச்சுறுத்தியவர்கள் யார்?

    வவுனியாவில் போராட்டம் நடத்தியவர்களை அச்சுறுத்தியவர்கள் யார்?

    வவுனியாவில் காணாமல் ஆக்கப் பட்ட உறவுகளினால் 01 ஒக்டோ பர் 2024 முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை ஜனாதிபதி அனுரவின் ஆதரவாளர் எனக் கூறிய நபர் ஒருவர் குழப்பியமையால் பதட்டமான நிலமை ஏற்பட்டது. சர்வதேச சிறுவர் தினத்தன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதி யில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அந்த இடத்திற்கு வந்த இனம் தெரியாத நபர் ஒருவர் இது அனுரவின் ஆட்சி நீங்கள் எல்லாம் வயிறு வளர்க்கிறீர்கள். உங்களுக்கு பணம் வருகின்றது. என போராட் டத்தில் ஈடுபட்ட தாய்மாருடன் முரன்பாட்டில் ஈடுபட்டுள்ளார். உங்களை பொலிஸில் பிடித்து கொடுப்பேன். நான் அனுரகுமாரவுடனேயே இருவருடமாக நிற்கிறேன். பொலிஜிம் புலனாய்வு பிரிவும் வந்து இப்போது உங் களை கைது செய்வார்கள். நாய் களே எல்லாரும் வீடு செல்லுங்கள் என்று ஒருமையில் கண்டபடி திட்டியுள்ளார். இதனையடுத்து காணாமல் போன உறவுகளும் அவருடன் முரன்பாட்டில் ஈடு பட்டுள்ளனர்.
    இதனால் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன் சிறிது நேரத்தின் பின்னர் குறித்த நபர் அவர்களை அச்சுறுத்தியபடி அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றிருந்தார்.


    இச்சம்பவம் தொடர்பில் அன்று மாலையே எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர். அவ் வாறான செயற்பாடொன்றே இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தின் போதும் நடந்தது என தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், செவ்வாய்க்கிழமை காலை காணா மல் ஆக்கப்பட்டோரின் உறவினர் கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் இடைåறு ஏற்படுத் தியதோடு தாம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் என பொய்யாக கூறி எமது கட்சிக்கு உள்ள நற்பெயரை கலங்கப்படுத்த வும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கோடும் செயற்பட்டிருந்தனர்.


    தற்போது தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படு கின்ற ஆதரவையும் நல்ல எண் ணத்தினையும் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இவ்வாறு கீழ்த்தரமான செயலில் ஈடுபட் டதை எண்ணி மனவருத்தமடை கின்றோம். இனி வரும் காலங்களில் இவ் வாறான செயற்பாடு இடம் பெறாத வகையில் எமது அரசாங்கம் அதனைப் பார்த்துக் கொள்ளும். தேர்தல் நெருங்கி வரும் காலங் களில் இவ்வாறான சேறு ©சும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நாங்கள் தமிழ் மக்களிடமும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் களிடமும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

  • ரணில் அரசிடம் “சாரயச்சாலை” அனுமதிப் பத்திரம் வாங்கிய முன்னாள் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்

    ரணில் அரசிடம் “சாரயச்சாலை” அனுமதிப் பத்திரம் வாங்கிய முன்னாள் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்

    வடக்கு கிழக்கு மாகணங்கள் எங்கும் மதுபானச்சாலைகளும் இளைஞர்கள் மத்தியில் போதைப் பாவனைகளும் சிங்கள அரசாங்கத்தால் திட்டமிட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்று இதுவரை இருந்த குற்றச்சாட்டாகும். ஆனால் தற்போது புதிய அரசு பொறுப்பேற்றதன் பின்னர் இத்தகைய செயற்பாடுகளில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாகத் தெரிய வந்து கொண்டிருக்கின்றது. தன்னை ஒரு தூய்மைவாதி என்று பீற்றித் திரியும் அயோக்கியத்தனம் நிறைந்த முன்னாள் அநீதியரசர் விக்கினேஸ்வரன் தான் செய்தது ஒரு சமூகக் கேடு என்பதை ஏற்றுக் கொள்ளாது தெரிவிக்கும் கருத்தினைப் பாருங்கள்.


    மதுபான சாலை அனுமதியினை பெறு வதற்காக சிபாரிசு கடிதம் ஒன்றினையே வழங்கினேன் அதனை வைத்து ஏதோ பெரிய ©தம் இருப்பது போன்று காட்டமுயல்கின்றனர். அவை என்னை எதுவும் செய்யாது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த 30 செப் 2024 திங்கட் கிழமை ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த போதே அவ்வாறு தெரி வித்துள்ளார்.

    மேலும் தெரிவிக்கையில் பெண்ணொருவர் என்னிடம் வந்து மதுபான சாலை ஒன்றின் அனுமதிக் காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிபாரிசு கடிதம் தேவை என கேட்டார். அவரின் பெற்றோர் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அதனால் சிபாரிசு கடிதம் வழங்கினேன். அந்த கடிதம் கொடுத்தது உண்மை. மதுபான சாலை அனுமதி பத்திரங் களை எடுத்து அதனை கோடி ரூபாய் கணக்கில் விற்பதாக கூறுகின்றார்கள். அது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
    அரசியல் ரீதியாக என்னை அடிக்க வேண்டும் என்பதற்காக சிபாரிசு கடிதம் கையளித்ததை வைத்து, ஏதோ பெரிய ©தம் இருப்பது போன்று காட்ட முனைகிறார்கள். அதெல்லாம் என்னை எதுவும் செய்யாது என மேலும் தெரிவித்தார்.


    இது இவ்வாறிருக்க இதனிடையே கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் புதிய மதுபானச்சாலைக்கான உரிமம் ஒன்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமான விக்னேஸ் வரன் ஊடாகப் பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சி.வி.விக்னேஸ் வரன் கடந்த பெப்ரவரி 19 அன்று எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையிலேயே மதுபான சாலைக் கான அனுமதி அப்போதைய ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. தனுசா நடராசா என்னும் பெயரில் மதுபானசாலைக்கான அனுமதியை சி.வி.விக்னேஸ்வரன் பரிந்துரைத்துள் ளார். தனுசா முதலில் ஓர் இரணுவ த்தில் பணியாற்றிய இராணுவ சிப் பாயை திருமணம் செய்திருந்த நிலையில் பின்னார் இராணுவ சிப்பாயை விவாகரத்து செய்துள்ளார்.

    தற்பொழுது சமத்துவ கட்சியின் தலை வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினருமாகிய முருகேசு சந்திரகுமாருடன் வாழ்ந்து வருகின்றார். அதேவேளை தனுசாவிற்கு சொந்தமாக சுன்னாகம் இணுவில் மற்றும் கனகபுரம் பகுதிகளில் மதுபானச்சாலைகள் உள்ளதாக கூறப்படுகின்றது. தனுசாவின் தந்தையார் சுன்னாகத்தில் இருந்த பிரேமானந்தாவின் ஆச்சிரமத்தில் அவரது பக்தனாக இருந்தவர். இந்தியாவின் பாலியன் குற்றவாளியாக நீதிமன்றத்தால் கண்டறிப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேமானந்தாவின் இந்த அநீதியரசரும் சீடர் என்பதும் முதலமைச்சராக பதவியேற்ற வுடன் இந்தியப் பிரதமர் மோடிக்கு பிரேமானந்தாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கும்படி கடிதம் எழுதிய வரலாற் றுப் பெருமை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    வடகிழக்கை மையப்படுத்தி நூற்றுக் கணக்கில் மதுபான சாலைகளை தெற்கு அனுமதித்துள்ளது. இந்நிலை யில் மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமை யில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான சாலையை உடனடியாக இட மாற்றக் கோரி நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மதுபானசாலைக்கு முன் பாக கடந்த 30 செப் 2024 திங்கட் கிழமை சவப்பெட்டியுடன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இந்நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் மாவட்ட செயலரிடம் கையளிக்கப்பட்டதுடன் அவரது வாக்குறுதிக்கமைய மக்கள் ஆர்ப்பாட் டத்தை கை விட்டுள்ளனர்.

  • இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்கவை சந்தித்தார்

    இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்கவை சந்தித்தார்

    இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ள்ள இந்திய வெளிவிவகார அமை ச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்
    சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது. ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக் கவை சந்திக்க முடிந்ததை கௌரவமான விடயமாக கருதுகின்றேன்.
    இந்திய குடியரசுதலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்த்துச் செய்தி களை தெரிவித்தேன். இந்திய இல ங்கை உறவுகளிற்கான அவரது அன் பான உணர்வுகளிற்கும் வழிகாட்டு தல்களிற்கும் பாராட்டுக்கள். தற்போதைய ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்குவது குறித்தும் இரு நாடுகளினது மக்களினதும் பிராந்தியத்தினதும் நன்மைக்காக இந்திய இலங்கை உறவுகளை வலுப் படுத்துவது குறித்தும் ஆராய்ந் தோம் எனத் தெரிவித்துள்ளார்.


    இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின் னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் விஜயம் என்பதால் இந்த விஜயம் மிகுந்த முக்கியத் துவம் பெறுகின்றது. இந்தியாவின் அயல் நாடுகளிற்கு முன் னுரிமை மற்றும் சாகர் கொள்கை களின் அடிப்படையில் இந்த விஜயம் பரஸ்பர நன்மைக்காக நீண்ட ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும் இரு தரப்புகளினதும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்து ள்ளது. ஜெய்சங்கரின் விஜயம் இரு நாடு களிற்கும் இடையிலான உறவுகளை மீளாய்வு செய்வதுடன் கொழும்பின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் எதிர் கால சாத்தியக்கூறுகள் குறித்து ஆரா யும் வகையில் அமைந்திருக்கும்.

    இந்திய முதலீடுகள், பிராந்திய பாது காப்பு, இலங்கையின் சிறுபான்மை தமிழர் தொடர்பான அணுகுமுறை குறித்த அனுரகுமாரதிசநாயக்கவின் நிலைப்பாட்டை புதுடில்லி கேட்ட றிவதற்கான வாய்ப்பாக இந்த விஜயம் காணப்படும். புதன்கிழமை இலங்கை ஜனாதிபதியை சந்தித்த இலங்கை க்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா இலங்கை பிராந்தியத்தில் அமைதி யான ஸ்திரமான நாடாக மாறுவதை இந்தியா பார்க்க விரும்புவதாக தெரி வித்தார். ஊழலிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்தி;ற்கு உத வுவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்திற்கு உதவ தயார் என அவர் தெரிவித்தார்.

    இரு நாட்டு வெளிவகார அமைச்சர்கள் சந்திப்பு


    இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ள்ள இந்திய வெளிவிவகார அமை ச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பேச்வார்ததைகளை மேற் கொண்டுள்ளார் பரஸ்பரம் இரு தரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்து இரு வெளிவிவகார அமை ச்சர்களும் பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தவேளை இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து விஜித ஹேரத்திற்கு உறுதியளித்தேன் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


    இலங்கை வெளிவிவகார அமைச்சரு டனான பேச்சுவார்த்தைகளை ©ர்த்தி செய்துள்ளேன். அவருடைய புதிய பொறுப்புகளிற்காக அவருக்கு மீண் டும் வாழ்த்துக்களை தெரிவித்துள் ளேன். இந்திய இலங்கை கூட்டுறவின் பல் வேறு பரிமாணங்களை மதிப்பாய்வு செய்தோம். இலங்கையின் பொருளா தாரத்தை மீள கட்டியெழுப்புவதற் கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து விஜித ஹேரத்திற்கு உறுதியளித்தேன். அயல்நாடுகளிற்கு முன்னுரிமை,எங்கள் இரு நாடுகளின் உறவுகளின் முன்னேறத்தை எப்போ தும் வழி நடத்தும். என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


    இது இவ்வாறிருக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
    இந்தியப் பிரதமர் சார்பில் இந்த அழைப்பிதழை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ளார். இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவி யேற்ற பின்னர் இலங்கைக்கு வந்த உயர்மட்ட இராஜதந்திரி ஆவார்.
    இந்தியாவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோக©ர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லி க்கு மேற்கொள்ளவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
    இதேவேளை பிரதமர், மற்றும் ரணில் விக்கிரமசிங்கா சஜித் பிரேமதாசா ஆகியோரையும் இந்திய வெளிவிவ கார அமைச்சர் சந்தித்திருந்தார்.