February 19, 2026

தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள் எப்படி தமிழ்மக்களைத் திரட்ட முடியும்?


இது முகநூலில் காணப்படும் ஒரு பதிவு. இதை எழுதியவர் வன்னிப் பெருநிலத்தில் உள்ள ஒரு முன்ன ணிப் பாடசாலையில் ஆசிரியராக இருப்பவர். தமிழரசுக்  கட்சியை எங்கேயும் விட்டுக் கொடாதவர். எனது கட்டுரைகளில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் இருந்தால் அது தொடர்பாக முகநூலில் பதில் வினையாற்றுவார். ஆனால் அவர் தான் சில நாட்களுக்கு முன் மேற்கண்ட வாறு முகநூலில் எழுதியுள்ளார். அவர் ஏன் அப்படி எழுத வேண்டி வந்தது? கட்சியின் பதில் செயலாளராக உள்ள சுமந்திரன் அண்மையில் விடுத்த ஒரு அறிவிப்புத்தான் காரணம். கட்சி உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானங்களு க்கு எதிராக கதைத்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.
இதை அவர் தெரிந்து செய்கிறாரா? அல்லது தெரியாமல் செய்கின்றாரா? ஏனென்றால் இது போன்ற நடவடி க்கைகளின் விளைவுகள் எங்கே கொண்டு போய்விடும்? இக்கட்டுரையில் கூறப்பட்ட அந்த ஆசிரியர் மிகத்  துடிப்பான ஓர் அரசியல் செயற்பாட்டாளர். அவரே மனம் வெறுத்து அவ்வாறு முகநூலில் எழுதும் ஒரு நிலைமை வந்திருப்பது என்பது அவரைப் போன்ற பலர் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட முடிவை எடுக்கக்கூடும் என்பதனை ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.அதாவது கட்சி மேலும் சிதையும் நிலைமை தான் தெரிகிறது.

கிளிநொச்சியில் நடந்த கூட்டமும் அதைத்தான் காட்டுகிறது. தங்களுக்குள் தாங்களே மோதி கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதனை உணர முடியாத தலைவர்களா இவர்கள்?

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உள் முரண்பாடு பற்றி திரும்பத் திரும்ப எழுதுவது சலிப்பூட்டுவது. ஆனால் அப்படி எழுதுவது தவிர்க்க முடியாததும் கூட. ஏனென்றால் உள்ளதில் பெரிய கட்சி. அந்தக் கட்சியும் சிதைந்தால் அதற்கு மாற்றாக மேல் எழுவதற்கு முன்னணியால் முடியுமா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த 16 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் பெரு வெற்றி பெற முடியவில்லை. அவர்கள் தான் ஒப்பீட்டளவில் தெளிவாக கொள்கைகளை முன் வைக்கிறார்கள். ஆனால் அவர் களால் கடந்த 16 ஆண்டுகளாக தமது கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியவில்லை. 

கடந்த நாடாளுமன்றத்தில் கிடைத்த தோல்வியும் கட்சியின் தலைவர் கஜேந்திரக்குமாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும் அவர்களை புதிய பாதையில் சிந்திக்க வைத்திரு க்கிறது என்று தெரிகிறது. அவர்கள் ஒரு மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பதாக வும் தெரிகிறது. ஆனால் மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பது என்பது என்ன? நடந்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுவது மட்டுமல்ல, அதை விட ஆழமான பொருளில் கட்சியை கட்ட மைப்பு ரீதியாக மீளக்  கட்டியெழுப்புவது.

அண்மையில் ஒரு கிறிஸ்தவ மதகுரு இந்தியாவில் இருந்து வந்திருந்தார். இந்தியாவில் மேற்படிப்புக்காகச் சென்றவர். அவர் அங்கே தமிழகக் கிராமங்களில் கட்சிகளுக்கு உள்ள வட்டச் செயலர் என்ற பதவி நிலையைக்  குறித்து  உரையாடினார். வட்டச் செயலர் என்ற பதவி தமிழக மக்களைப் பொறுத்தவரை தமிழ்ச் சினிமாவில் வடிவேலுவின் நகைச் சுவையோடு சேர்ந்து பிரபல்யமான ஒரு பதவி நிலை. ஆனால் அது ஒரு நகைச்சுவைப் பாத்திரம் அல்ல. கிராம மட்டத்தில், அடி மட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தும் ஒரு பதவி நிலை. அது ஒரு பொறுப்பு. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுக்கு அவ்வாறு ஆழமான அடிபட்டக் கட்ட மைப்புகள் உண்டு. வட்டச் செயலர்கள் கிராம மட்டத்தில் கட்சியைக் கட்டியெழுப்புகிறார்கள். கீழ் மட்டத் தில் மக்களோடு உயிர்த் தொடர்பைப் பேணுகிறார்கள், வளர்க்கிறார்கள். தமது நிர்வாகப் பகுதிக்குள் வாழும் மக்களின் சுகதுக்கங்களில் பங்கெடுக்கிறார்கள். அவர்கள் அடிமட்ட மக்களை அரசியல் மயப்படுத்துகிறார்களோ இல்லையோ அவர்களை கட்சிமயப்படுத்துகிறார்கள்.

நமது தமிழ்த் தேசியக் கட்சிகளில் எத்தனை அப்படிப்பட்ட கிராம மட்டக் கட்டமைப்புகளை, பதவி நிலைகளைக் கொண்டிருக்கின்றன?

இதற்கு தமிழ்நாட்டு உதாரணம் கூடத் தேவையில்லை. 83 யூலைக்கு பின் தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருந்தன? எப்படிப்பட்ட கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தங்களைப் பலப்படுத்திக் கொண்டன? என்பவற்றில் இருந்தாவது குறைந்த பட்சம் கற்றுக் கொண்டிருக்கலாம்.

தமிழ் இயக்கங்களுக்கு கிராம மட்டத் தில் கிராமப் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக ஏரியாக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக அரசியல் துறைப் பொறுப்பாளர் இருந்தார். அரசியல் துறைக்கு மட்டுமல்ல படைத்துறை, நிதித்துறை, புலனாய்வுத்துறை முதலான எல்லாக் கட்டமைப்புகளுக்கும் அவ்வாறு கீழே இருந்து மேல் நோக்கிய சீரான கட்டமைப்புகள் இருந்தன. 

இந்தக் கட்டமைப்புகள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும். மேலிருந்து கீழ் நோக்கி வழிநடத்தப்படும். இயக்கங்களின் கட்டமைப்புகள் பெருமளவு க்குப் படைப் பரிமாணத்தை கொண்டவை என்பதனால் அங்கே உத்தரவுக்குக் கீழ்ப்படியும் ஒரம்சம் இருக்கும். அதை முழுமையாக ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் நடைமுறைப் படுத்த முடியாது. இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஒரு பொருத்தமான நடைமுறையைக் கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் கிராம மட்டக் கட்டமைப்புகளை பலப்படுத்தாமல் கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியாது மட்டுமல்ல தேர்தல் அரங்கு களில் வெற்றிகளை உறுதிப்படுத்தவும் முடியாது.

ஜனநாயக அரசியலில் வெற்றி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை தான் எது பெரும்பான்மை என்பதைத் தீர்மானிக்கும். பெரும்பான்மையின் கருத்துத் தான் அந்த மக்கள் கூட்டத் தின் கருத்தாக எடுத்துக்கொள்ளப் படும். 
எனவே கட்சி மைய அரசியலுக் கூடாகச் சிந்திக்கும் பொழுது தேர்த லில் வெற்றி பெறுவது அவசியம்.

அதேசமயம் தேர்தல்மைய அரசியலு க்கு வெளியேயும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டிய பொறு ப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு.

கட்டுரைகள்…